இன்றைய வரலாற்று பக்கத்தில் இடம் பிடிக்குமா டெல்லி! முதல் முறையாக இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்! வெற்றி பெற்று சென்னையின் சாதனையை எட்டி பிடிக்குமா மும்பை!

Advertisement

கொரோனா தொற்றின் காரணமாக 2020 ம் ஆண்டின் 13 வது ஐபிஎல் சீசன் இந்தியாவில் நடைபெற வாய்ப்பு மறுக்கப்பட்டதால், ஐக்கிய அரபு எமிரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் திருவிழா இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்து, இறுதிப் போட்டிக்குள் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் நுழைந்துள்ளன. கடந்த சில ஆண்டுகளாகவே ஐபிஎல் சீசனில் மும்பை தனது ஆதிக்கத்தைக் கோலோச்சி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தமுள்ள எட்டு அணியில் மும்பை இந்தியன்ஸ் அணி இறுதி போட்டிக்குள் நுழைவது வாடிக்கையான ஒன்றாகவே உள்ளது. மீதமுள்ள ஏழு அணிகள் போட்டியிட்டு ஒரு அணி இறுதிப் போட்டிக்குள் நுழைய வேண்டும் என்ற அளவுக்கு மும்பை அணியின் ஆதிக்கம் உள்ளது.

மும்பை அணி இதுவரை நான்கு ஐபிஎல் தொடரை வென்றுள்ளது. சென்னை அணி மூன்று, கொல்கத்தா இரண்டு, சன் ரைசஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெக்கான் சார்ஜர்ஸ் தலா ஒருமுறை தொடரைக் கைப்பற்றி உள்ளது.இதுவரை தொடரை வெல்லாத அணிகளான ராயல் சாலஞ்சர் பெங்களூர், டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளில் முதன் முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி.

மும்பை அணியைப் பொறுத்தவரை அவர்கள் சரியான கலவையில் இந்தாண்டு பயணிப்பது அவர்களின் மிகப்பெரிய பலம். அதிரடி பேட்ஸ்மேன்கள், அட்டகாச படுத்தும் ஆலரவுண்டர்கள் மற்றும் அனல் பறக்க வைக்கும் பந்து வீச்சாளர்கள் என மும்பை அணி சரியான விகிதத்தில் உள்ளது இது டெல்லி அணிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தும். ஆனால் மும்பை அணி இதுவரை நடந்த ஐபிஎல் சீசனில் நான்கு முறை தொடரை வென்றுள்ளது. ஆனால் நான்குமே ஒற்றைப்படை ஆண்டுகள் 2013,2015,2017,2019. இரட்டைப்படை ஆண்டுகளில் மும்பை அணி அரையிறுதிக்குள் நுழைந்தது கூட இல்லை, இதுவே முதல் முறையாகும். இந்த தொடரில் வெற்றி பெற்றால் தொடர்ச்சியாக இரு முறை தொடரை வென்ற சென்னை அணியின் சாதனையைச் சமன் செய்யலாம்‌.

டெல்லி அணியைப் பொறுத்தவரை இதுவே இறுதிப் போட்டியின் முதல் பிரவேசம். டெல்லி அணி கடைசியாக விளையாடிய ஏழு போட்டிகளில் இரண்டு போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. அதில் ஹைதராபாத் அணியை வென்ற தகுதி சுற்று 2 சேர்த்து.

டெல்லி அணி சீசனின் முதல் சற்றில் சிறப்பாக விளையாடி தனது பலத்தைப் பதிவு செய்தது. ஆனால் இரண்டாம் பாதியில் டெல்லி அணியால் தனது தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை இறுதியில் இருப்பை தக்கவைத்துக் கொள்ளவே திண்டாடியது. ஒருவழியாக முட்டி மோதி, புரண்டு தகுதி சுற்றில் நோயாளிகளின் கூடாரமாக மாறிப்போன ஹைதராபாத் அணியைத் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

மும்பை அணி லீக் போட்டிகளில் டெல்லி அணியை இரண்டு முறையும் பந்தாடியது குறிப்பிடத்தக்கது. மேலும் முதல் தகுதி சுற்றில் மீண்டும் டெல்லியைத் துவைத்து எடுத்துக் காயப் போட்டது.ஆனால் மீண்டும் இறுதிப் போட்டியில் டெல்லி அணி, மும்பை அணியைச் சந்திக்க வேண்டும். இந்த செய்தி ஏற்கனவே டெல்லி அணியினரின் வயிற்றில் புளியைக் கரைத்து இருக்கும்.

கடந்த தகுதி சுற்றில் டெல்லி அணி தொடக்க இணையாக ஸ்டேய்னஸ் மற்றும் தவான் இருவரையும் களமிறக்கியது. இந்த பரீட்சையும் அணிக்குச் சாதகமான முடிவையே தந்தது. எனவே இந்து முறையும் அவர்கள் இதே ஆர்டரை தொடர வாய்ப்புள்ளது. ஆனால் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து சொதப்பி வருவது அணிக்குப் பலவீனத்தை ஏற்படுத்தும்.

கடந்த போட்டியில் கெத்து காட்டிய ஹெட்மயர் இந்த போட்டியிலும் அதிரடியில் ஜொலித்தால் டெல்லி அணி மிகப்பெரிய ரன்னை இலக்காக நிர்ணயிக்கலாம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தால்.இந்த சீசனின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லி அணியின் ரபாடா முதல் இடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் நோர்ட்ஜா, அஷ்வின் சிறப்பாகப் பந்து வீசினால் டெல்லி அணிக்கு வெற்றி வாய்ப்புண்டு.

மும்பை அணியைப் பொறுத்தவரை டெல்லி அணியை இந்த சீசனில் மூன்று முறை தோற்கடித்த கர்வம் இருக்கும். மேலும் இது வரை சிறப்பாகச் செயல்படாத மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா இந்த முறையாவது ஜொலிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை அணியின் சுழல் பந்து வீச்சாளர்கள் தான் அணியின் வெற்றியைத் தீர்மானிக்க வேண்டும். எது எப்படி இருந்தாலும் மும்பை வென்றால் மேலும் ஒரு வெற்றி ஆனால் டெல்லி வென்றால் அது ஒரு புது வரலாறு.

Advertisement
மேலும் செய்திகள்
post-a-hilarious-summary-of-their-win-over-rcb-using-chris-gayle-yuzvendra-chahal-s-reference
யாரு பலசாலி?- கிறிஸ்கெய்லுக்கு டஃப் கொடுத்த சஹால்.. வைரல் போட்டோ!
adam-zampa-talk-about-ipl
ஐபிஎல் முக்கியம் என்பவர்கள் வீட்டில் ஒருவருக்கு கொரோனா வந்தால் தெரியும் - கொதிக்கும் ஆடம் ஜாம்பா
pat-cummins-donates-50000-to-pm-cares-fund
என்னால் முடிந்தது; ஆக்ஸிஜன் வாங்கிக்கொள்ளுங்கள் - பேட் கம்மின்ஸ் மனிதநேயம்
the-lowest-score-by-rcp-in-ipl-t20-cricket-history
ஆர்சிபி வரலாற்றில் மறக்க முடியாத நாள் - 49க்கு ஆல் அவுட் வெற்றியாளராக மாற்றிய வெறி!
jofra-archer-out-of-ipl
நடப்பு ஐபிஎல் சீசனிலிருந்து விலகினார் ஆர்ச்சர் - என்ன காரணம்?
raina-touch-harbhajan-singh-feet
ஹர்பஜன்சிங் காலில் விழுந்து வணங்கிய சின்னதல - ரசிகர்கள் நெகிழ்ச்சி!
virat-kholi-talk-about-devdutt-padikkal
ரசிகர்களே ஓவர் ஆட்டம் வேண்டாம் – விராட் கோலியின் அந்த விளக்கம்!
pragyan-ojha-reveals-the-reason-why-ms-dhoni-never-wishes-his-teammates-good-luck
தோனி அதை மட்டும் செய்யமாட்டார் - அடித்து சொல்லும் முன்னாள் வீரர்!
csk-should-build-their-team-around-him-michael-vaughan-picks-ravindra-jadeja
தோனிக்கு பிறகு இவரை கேப்டனாக்கலாம்! – மைக்கேல் வாகன் கருத்து
rashid-khan-s-instagram-reel-of-kane-williamson-and-david-warner-has-gone-viral
`அன்பு சூழ் உலகு – ரஷித்கானுக்காக நோன்பிருக்கும் டேவிட் வார்னர்!

READ MORE ABOUT :

/body>