மேட்டுப்பாளையம் அருகே தமிழக-கேரள எல்லைப் பகுதியான அட்டப்பாடி அகழி. இதனருகே கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடியில் உள்ள வட்ட லக்கி மலை என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஒருவர் புலித்தோலை கொண்டுவந்து 50 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்ய இருப்பதாக அங்கு உள்ள வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலை தொடர்ந்து சைலன்ட் வேலி துணைை வன உயிரின அதிகாரி அஜய்கோஸ் தலைமையில் அரேஞ்ச் ஆபிஸர் ஆஷா லதா மற்றும் அகழி ரேஞ்சர் உதயன் மற்றும்
வனத்துறையினர் அந்தக் கிராமத்துக்குச் செல்லும் வழியில் காத்திருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த பூபதி என்பவரை வழிமறித்து சோதனை செய்தனர்.
அப்போது அவரிடம் புலித்தோல் ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். பூபதி என்பவரை வழிமறித்து சோதனை செய்தனர் அப்போது அவரிடம் புலித்தோல் ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.49 வயதான பூபதி ஈரோட்டைச் சேர்ந்தவர் என்றும் இந்த புலித்தோல் ஈரோட்டில் டிரைவர் ஒருவர் தன்னிடம் கொடுத்து இதை அட்டப்பாடியில் வட்ட லக்கி மலை கிராமத்தில் கொண்டு சென்றால் அங்கு இதை வாங்கி சல்ல ஒருவர் வருவார் என்றும் இதற்காக 50 லட்ச ரூபாய் விலை பேசப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து அவருக்கு புலித்தோல் எப்படி வந்தது எங்கிருந்து வந்தது என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்