800 வீடியோ மற்றும் புகைப்படங்கள்... சிக்கலில் நாகர்கோவில் காசி!

800 videos and photos recovered from nagerkovil kasi laptop

by Sasitharan, Nov 11, 2020, 21:54 PM IST

நாகர்கோவில் கணேசபுரத்தை ஸர்வதா காசி என்ற வாலிபர் சமூக வலைத்தளங்கள் மூலம் பெண்களிடம் பழகி அவர்களை ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக சில நாட்களுக்கு முன் கைதானார்.சென்னை பெண் டாக்டர் உட்பட ஏராளமான இளம் பெண்களிடம் சமூக வலைத்தளங்களில் பழகி அவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்து பணம் கேட்டு இவர் தனது நண்பர்கள் உதவியுடன் மிரட்டியதாகப் புகார் வந்தது. இது தொடர்பாகக் காசி 26, மற்றும் அவனது கூட்டாளிகள் டைசன் ஜீனோ 19, கணேசபுரத்தைச் சேர்ந்த தினேஷ் ஆகியோர் கைதானார்கள். இது குறித்த வழக்கு சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

இதற்கிடையே, இந்த காசி மீது ஏற்கனவே 5 பெண்கள் புகார் கொடுத்து இருந்தனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் சென்னையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் காசி மீது புகார் அளித்து அதிர்ச்சி ஏற்படுத்தினார். இந்த புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி காசியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தியது. அப்போது காசியின் லேப்டாப் மற்றும் செல்போன்களில் இருந்து அளிக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் படங்கள் மீண்டும் மீட்கப்பட்டது. இதன் எண்ணிக்கை மட்டுமே 800க்கும் மேல் எனக் கூறப்படுகிறது. இதனால் அவர் மீது வழக்கு இன்னும் வலுவாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த வீடியோக்கள் மற்றும் படங்களை பகிர்ந்துகொண்ட காசியின் நண்பர்களும் விரைவில் சிக்குவார்கள் போலீஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளதால், இந்த வழக்கு விரைவில் விஸ்வரூபம் எடுக்கும் என தெரிகிறது.

More Crime News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை