மன்றத்துக்கு புதிய நிர்வாகிகள்... தந்தைக்கு தொடர் தடை போடும் விஜய்!

vijay appoint new secretaries for makkal iyakkam

by Sasitharan, Nov 11, 2020, 22:12 PM IST

சமீபத்தில், `என் தந்தை அரசியல் கட்சியை தொடங்கினார் என்பதை ஊடகங்கள் வாயிலாக அறிந்துகொண்டேன். தந்தை ஆரம்பித்துள்ள கட்சியில் ரசிகர்கள் யாரும் இணைய வேண்டாம். அந்தக் கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்தத் தொடர்பும் இல்லை" எனக் கூறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார் நடிகர் விஜய். தந்தையின் அரசியல் மூவை தடுத்து நிறுத்தவே இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதேநேரம் தந்தையும், மகனும் பல ஆண்டுகளாக பேசுவதே இல்லை என்று அடுத்த அதிர்ச்சியை கொடுத்தார் விஜய்யின் அம்மா. அடுத்து அரசியல் நெருக்கடிகளை சந்தித்ததை அடுத்து விஜய் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை மாவட்ட வாரியாக சந்தித்து பேசினார்.

இந்நிலையில் தற்போது தனது மக்கள் இயக்கத்திற்கு மாவட்ட தலைவர்கள், இளைஞரணி தலைவர்களை நியமித்து அதிரடி காட்டியிருக்கிறார் விஜய். சென்னை, கோவை, திருச்சி, மதுரை, காஞ்சிபுரம், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் புகைப்படம், இயக்கத்தின் பெயர், கொடி உள்ளிட்ட அனைத்து பயன்பாடுகளுக்கும் அனுமதி பெறவேண்டும் என்றும் மீறுவோர் மீது இயக்கத்தின் சார்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். தந்தையின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த இப்போதே விஜய்யே நேரடியாக களத்தில் இரங்கி அதிரடி காட்டியுள்ளார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை