வீட்டில் தனியாக இருந்த 90 வயது மூதாட்டியிடம் சில்மிஷம்.. 20 வயது இளைஞர் கைது..

by Logeswari, Nov 17, 2020, 13:43 PM IST

கோவை மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த கிழவியை வீடு பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். பிறந்த குழந்தை முதல் நடக்க முடியாத மூதாட்டியை வரை யாரையும் விட்டு வைப்பதில்லை. பெண்களுக்கு பாதுகாப்பு என்பது ஒன்று இல்லாமலே போகிவிட்டது. பெண்களுக்கு எதிராக பல தவறுகள் தலை விரித்து ஆட தொடங்கிவிட்டது. கோவையில் நடந்த மிக கொடூரமான சம்பவம் தான் இதற்கு சாட்சி.. கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியை சார்ந்தவர் மைதீன். இவருக்கு வயது 20. பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார். இவர் வீதியில் சென்று கொண்டு இருந்த பொழுது ஒரு வீட்டில் 90 வயது மூதாட்டி தனியாக இருந்துள்ளார்.

இதனை கவனித்த மைதீன் வீட்டில் நுழைந்து 90 வயது மூதாட்டியை கொடூரமாக தாக்கி பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். மூதாட்டி சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். அதை கண்ட மைதீன் யாரிடமும் சிக்காமல் தப்பித்துவிட்டார். 90 வயது கிழவி பொள்ளாச்சியில் உள்ள காவல் நிலையத்தில் மைதீன் பெயரில் பலாத்காரம் செய்ய முயன்றதாக புகார் அளித்தார். இதனால் போலீஸ் விரைந்து மைதீனை பொறி வைத்து கையும் களவுமாக பிடித்து சிறையில் அடைத்தனர்.

More Crime News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அதிகம் படித்தவை