நிச்சயம் எனக்கு காதல் திருமணம் தான்.. மனம் திறந்த பிரபல நடிகை ..!

by Logeswari, Nov 17, 2020, 13:42 PM IST

தமிழ் சினிமா என்றால் அனைவருக்கும் ஞாபகம் வரும் முதல் முகம் திரிஷா தான். இவர் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான திகழ்ந்து வருகிறார். இவர் விஜய், அஜித், விஷால், ஆர்யா போன்ற முக்கிய நடிகர்களுடன் பல படங்கள் நடித்துள்ளார். கில்லி, மோகினி, கொடி, என்னை அறிந்தால் போன்ற பல ஹிட் திரைப்படங்களை கொடுத்தார். பின்னர் சிறிது காலம் சினிமாவை விட்டு விலகி இருந்த திரிஷா விஜய் சேதுபதிவுடன் சேர்ந்து 96 என்ற படத்தில் நடித்தார். இத்திரைப்படம் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது. இப்படம் எல்லோரையும் தங்களது பள்ளி காலத்திற்கு கொண்டு சென்று விட்டது என்றே கூறலாம். இவருக்கு சில நாள்களுக்கு முன் சென்னை தொழில் அதிபருடன் நிச்சயம் முடிந்தது. ஆனால் அவர் திருமணத்தை நிறுத்தி விட்டதாக ஒரு நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.

திருமணத்திற்கு பிறகு திரிஷா நடிக்க கூடாது என்று அவரது வருங்கால கணவர் கூறியதால் அவர் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்று அதிர்ச்சி தகவல்கள் ஊடக முழுவதும் வெளியாகியது. இதன் பிறகு நடிகர் விஷால் கூட திரிஷா சேர்த்து வைத்து பல கிசு கிசுக்கள் வெளியானது. சினிமா என்றாலே இப்படி கிசு கிசுக்கள் வெளியாககூடும். பல வருடங்கள் கழித்து திரிஷா திருமணத்தை பற்றி மனம் திறந்து உருக்கமாக கூறியுள்ளார். அதாவது என்னை யார் முழுவதுமாக புரிந்து கொள்கிறாரோ அவரை தான் திருமணம் செய்து போவதாக கூறியுள்ளார். காதலில் தான் அதிக புரிதல் இருக்கும். ஆதலால் எனக்கு நிச்சயம் காதல் திருமணம் தான்.. அப்படிப்பட்ட ஒருவரை நான் இன்னும் சந்திக்க வில்லை. சந்திக்கும் வரையில் காலம் முழுவதும் காத்து இருப்பேன். அப்படி யாரையும் சந்திக்க வில்லை என்றால் வாழ்க்கை முழுவதும் தனியாகவே இருந்துவிடுவேன் என்று கூறியுள்ளார்

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை