வாக்காளர் பட்டியல் 4 நாட்கள் சிறப்பு முகாம் தமிழக தேர்தல் ஆணையர் தகவல்

by Balaji, Nov 17, 2020, 18:00 PM IST

வாக்காளர் பட்டியலில் பெயர் சீர்திருத்தம் தொடர்பாக 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் எனத் தமிழக தேர்தல் ஆணையர் சத்திய பிரதா சாஹு தெரிவித்து உள்ளார்.இன்னும் ஐந்து மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி, திருத்தங்கள் நடைபெற்று நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதன்படி, தமிழகத்தில் மொத்தம் 6.10 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 3.09 கோடி பேர் பெண்கள், 3.01 கோடி பேர் ஆண்கள், 6,385 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள்.
இந்தப் பட்டியலில் உள்ள சுமார் 13.75 லட்சம் பேர் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர் 2.08 லட்சம் பேர் முதல் முறையாக வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.வாக்காளர் பட்டியலின் நகல்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிடம் மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ தெரிவித்தார்.

தற்போது , தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நவம்பர் 21 மற்றும் 22, டிசம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் (4 நாட்கள்) நியமிக்கப்பட்ட இடங்களில் (பொதுவாக வாக்குச் சாவடிகள்) சிறப்புப் பிரச்சாரங்கள் நடத்தப்படும்.01-01-2021 அன்று 18வயது பூர்த்தியடையும் அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்.“வாக்காளர் பட்டியலில் பெயர்கள், விலாசம் மற்றும் விவரங்கள் சேர்ப்பது / நீக்குவது / மாற்றுவது ஆகியவற்றிற்கான படிவங்கள் நியமிக்கப்பட்ட இடங்களில் கிடைக்கும். படிவங்களில் நிரப்பப்பட்டவைகளை அங்குச் சமர்ப்பிக்கலாம்”
Www.nvsp.in, https://voterportal.eci.gov.in மற்றும் VOTER HELPLINE Mobile App ஆகியவற்றின் மூலமும் ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம். 01.01.2021 அன்று 18 வயதை நிறைவு செய்யும் நபர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாத நபர்கள் படிவம் 6-ஐ விண்ணப்பிக்க வேண்டும்” .

ஒரு நபர் தனது வசிப்பிடத்தை அவர் ஏற்கனவே வாக்காளராகப் பதிவு செய்திருந்த தொகுதிக்கு வெளியே மாற்றினால், அவர் படிவம் 6-ஐ விண்ணப்பிக்க வேண்டும். ஒரு நபர் தனது வசிப்பிடத்தை ஒரே தொகுதியில், ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றினால், விண்ணப்பப் படிவம் 8A-வை பூர்த்தி செய்ய வேண்டும். வாக்காளர் பட்டியலில் உள்ள ஒரு நபரின் விவரங்களைத் திருத்துவதற்கு, படிவம்-8-ஐ விண்ணப்பிக்க வேண்டும்.“மாற்றுதல் / திருத்தம் / இழப்பு / அழித்தல் ஆகிய மாற்றங்களுக்கு ஈபிஐசி பெற, தாலுகா / மண்டல அலுவலகத்தில் படிவம் -001-ஐ விண்ணப்பிக்க வேண்டும்” என அந்த அறிக்கை மேலும் குறிப்பிட்டுள்ளது.

More Tamilnadu News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை