நாளையே கல்லூரிகளில் சேர உத்தரவு: மருத்துவ மாணவர்கள் அதிர்ச்சி

by Balaji, Nov 18, 2020, 20:04 PM IST

மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தவர்கள் நாளையே அந்தந்த கல்லூரிகளில் சேர வேண்டுமென மருத்துவ கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் தேர்வான மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் மருத்துவ கல்லூரிக்கான கவுன்சிலிங் இன்று தொடங்கியது. முதல் கட்டமாக அரசு பள்ளிகளில் படித்து நீட் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான கவுன்சிலிங் நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று நடந்தது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு மாணவர்களுக்கு சேர்க்கை குறித்த ஆணையை வழங்கினார். இன்று சேர்க்கை ஆணை பெற்றவர்கள் நாளையே அந்தந்த கல்லூரிகளில் சேர வேண்டும் என மருத்துவ க்கல்வி இயக்குனரகம் திடீரென அறிவித்தது. இந்த அறிவிப்பால் அறிவிப்பால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஊருக்கு செல்ல முடியாத நிலையில் உள்ள மாணவர்கள் பெரும் தவிப்புக்கு உள்ளாயினர்.

வழக்கமாக அப்படி சேர்க்கை ஆணை பெற்றவர்கள் கல்லூரிகளில் சேர குறைந்தபட்சம் ஒரு வார காலம் அவகாசம் அளிக்கப்படும். ஆனால் இன்று சேர்க்கை ஆணை பெற்றவர்கள் நாளைய சேர வேண்டும் என்று உத்தரவிட்டு இருப்பது மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்களும் தவிப்புக்கு உள்ளாகினர். வரும் 20ம் தேதி நீதிமன்றத்தில் வழக்கு வருவதன் காரணமாக, அதற்குள் மாணவர்கள் கல்லூரிகளில் சேர்த்துவிட வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக தகவல் சொல்லப்பட்டது எனினும் எது நிஜம் யார் சொல்வது உண்மை என்பது தெரியாமல் மாணவர்கள் பெரும் குழப்பம் அடைந்தனர். கல்லூரிகளில் சேர ஒரு வார காலமாவது அவகாசம் அளிக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You'r reading நாளையே கல்லூரிகளில் சேர உத்தரவு: மருத்துவ மாணவர்கள் அதிர்ச்சி Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை