தூத்துக்குடியில் ரூ 10 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்

தூத்துக்குடியிலிருந்து அரபு நாடுகளுக்குக் கடத்தவிருந்த 10 கோடி ரூபாய் மதிப்பிலான 16 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்

by Balaji, Nov 21, 2020, 12:22 PM IST

தூத்துக்குடியில் உள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனம் மூலம் துபாய்க்குத் தேங்காய்கள் அனுப்ப அனுமதி பெறப்பட்டு இருந்தது. இதையடுத்து இந்த நிறுவனத்தின் சார்பில் சரக்கு பெட்டக ஒன்று நேற்று தூத்துக்குடி துறைமுகம் கொண்டுவரப்பட்டு துபாய் துறைமுகத்திற்கு அனுப்பத் தயாராக இருந்தது .இதையடுத்து இந்த நிறுவனத்தின் சார்பில் சரக்கு பெட்டகம் ஒன்று நேற்று தூத்துக்குடி துறைமுகம் கொண்டு வரப்பட்டு துபாய் துறைமுகத்திற்கு அனுப்பத் தயாராக இருந்தது.

துபாய் ஜெபல் அலி துறைமுகத்திற்கு இந்த சரக்குகள் ஏற்றுமதி செய்யப்பட இருந்தது.

சுங்கத்துறை அதிகாரிகள் இந்த பெட்டகத்தின் ஆவணங்களைப் பரிசோதித்த பின் சரக்கு பெட்டகத்தில் உள்ள சரக்குகளை ஆய்வு செய்தனர் அப்போது பெட்டகத்தில் முகப்பு பகுதியில் தேங்காய்களும் அதன் அடியில் செம்மரக் கட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது..சர்வதேச அளவில் இதன் மதிப்பு 10 கோடி ரூபாயாகும். இதைத் தொடர்ந்து அந்த பெட்டகம் துபாய்க்கு அனுப்பப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டது. செம்மரக் கட்டைகளைக் கொண்டு வந்தது யார் எங்குச் செல்கிறது என்பது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வருவாய் புலனாய்வு பிரிவினரும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More Thoothukudi News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அதிகம் படித்தவை