ஸ்டெர்லைட், காவிரி போராட்டத்துக்கு ஆதரவாக நடிகர் சங்கம் உண்ணாவிரதம்?

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு ஆதரவாக தென்னிந்திய நடிகர் சங்கமும் போராடவுள்ளது.

Apr 2, 2018, 10:03 AM IST

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு ஆதரவாக தென்னிந்திய நடிகர் சங்கமும் போராடவுள்ளது.

இது குறித்து, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் பொன்வண்ணன் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டியில், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. காவிரி நம் உரிமை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் போராடி வருகிறார்கள்.

இதேபோல் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 25 வருடங்களாக போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இது தூத்துக்குடி மக்களின் பிரச்சனை மட்டும் அல்ல. பொதுவான பிரச்சனை. இந்த 2 பிரச்சனைகளுக்காகவும் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.

அது உண்ணாவிரத போராட்டமா? அல்லது வேறு மாதிரியான போராட்டமா? என்பதை ஓரிரு நாளில் அறிவிப்போம். இதுபோன்ற சமூக பிரச்சனைகளுக்காக ஒரு ஆவணப்படம் தயாரிப்பது பற்றியும், நடிகர் சங்கம் ஆலோசிக்கும்.

தமிழ் திரைப்படத் துறையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக இக்கட்டான சூழ்நிலை நிலவுகிறது. டிஜிட்டல் கட்டணத்தை குறைக்கக் கோரி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகிறார்கள். டிஜிட்டல் கட்டணத்தை குறைக்கக்கோரி வருகிற 4ஆம் தேதி கோட்டை நோக்கி பேரணி நடைபெற இருக்கிறது. இந்த போராட்டத்துக்கு நடிகர் சங்கம் முழு ஆதரவு கொடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading ஸ்டெர்லைட், காவிரி போராட்டத்துக்கு ஆதரவாக நடிகர் சங்கம் உண்ணாவிரதம்? Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை