அரசு ஊழியர்கள் நவ. 26 இல் ஸ்டிரைக் செய்தால் நடவடிக்கை...!

by Balaji, Nov 23, 2020, 17:22 PM IST

மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் உள்ளிட்ட அறிவித்துள்ள பொது வேலை நிறுத்த அறிவிப்பு காரணமாக, தமிழக அரசு ஊழியர்களுக்கு வரும் 26 ஆம் தேதி விடுப்பு ஏதும் அளிக்கப்பட மாட்டாது. அன்று வேலைக்கு வராதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தலைமைச் செயலாளர் க.சண்முகம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.இது தொடர்பாகத் தலைமைச் செயலாளர் அனைத்துத் துறை செயலாளா்கள், துறைத் தலைவா்கள், மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பிய உத்தரவில் குறிப்பிட்டுள்ளதாவது:

மத்திய ஊழியா் சங்கங்கள் மற்றும் பணியாளர் சங்கங்களைச் சோந்தவா்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வரும் 26-ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இப் போராட்டத்தில் பங்கேற்பதோ அல்லது பங்கேற்பதாக அச்சுறுத்துவதோ தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளின் பிரிவுகளுக்கு எதிரானதாகும்.

இந்த விதிகளை மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள வரும் 26-ஆம் தேதி, அரசு ஊழியா் எவரேனும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றால் அவர்களுக்கு அன்றைய தினம் ஊதியம் அளிக்கப்படாது. மேலும், அன்றைய தினத்தில் மருத்துவ விடுப்பைத் தவிர்த்து, பிற விடுப்புகள் எதற்கும் அனுமதியில்லை.

வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள தினத்தன்று, ஊழியர்களின் வருகைப் பதிவேடு தொடர்பான விவரங்கள் அடங்கிய அறிக்கையை துறைத் தலைவர்கள் அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். தலைமைச் செயலகத்தைச் சோந்த ஊழியர்களது பதிவேட்டைத் தனியாக அனுப்பிட வேண்டும்.

More Tamilnadu News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை