பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் அரசின் நிலையான இயக்க நடைமுறையின் படி 50 சதவீத பக்தர்களுடன் மின் இழுவை இரயில்களை வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. இதில் பயணம் செய்ய ஆன்லைன் மூலம் பதிவு செய்து வரும் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பதிவு செய்ததற்கான இணையதள முகவரி:
https://tnhrce.gov.in/eservices/dharshanbooking.php?tid=32203&se
அல்லது
http://www.palanimurugantemple.org/
மின் இழுவை இரயில் சேவை தினமும் காலை 6 மணிக்கு துவங்கி இரவு 7.40 மணி வரை இந்த சேவை செயல்படுத்தப்படும். ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ஒரு இழுவை ரயில் இயக்கப்படும். இந்த மின் இழுவை ரயிலில் இரு வழிப் பயணம் செய்ய 100 ரூபாய் கட்டணமாகும். பக்தர்கள் வின்ச்சில் இருவழி பயணத்திற்கு (மலைக்கு மேல் செல்ல மற்றும் இறங்க) தங்கள் டிக்கெட்டுகளை ஆன்லைன் முறையில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். இதற்கென எந்த டிக்கட் கவுண்டரும் திறக்கப்படாது. முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் குறிப்பிட்ட வின்ச் பயணத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். வேறு பயணத்திற்கு பயன்படுத்த முடியாது.
முகவசம் அணிந்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். முன்பதிவு செய்யப்பட்ட பக்தர்கள் மலை மேல் பயணத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாக தயாராக இருக்க வேண்டும். கீழ்நோக்கிய பயணத்திற்கு, பக்தர்கள் எந்தவொரு வின்ச்சிலும் பயணம் செய்யலாம். நுழைவு நேரத்தில், அனைத்து பக்தர்களும் முன்பதிவின் போதுபயன்படுத்தப்பட்ட அசல் ஐடி சான்று காண்பிக்க வேண்டும். கூடுதல் நபர்கள் கண்டிப்பாக அனுமதிக்கப்படுவதில்லை. டிக்கெட்டில் அச்சிடப்பட்ட இருக்கை எண்ணில் பக்தர்கள் பயணிக்க வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகளை இதற்காக தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.