மதுரையில் தீப திருநாளான நேற்று பட்டாசு வெடித்த பொழுது எதிர்பாராத விதமாக சேனிடைசரில் தீப்பொறி பட்டு வீடு முழுவதும் நெருப்பால் சூழப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை பைப்பாஸ் ரோட்டில் இருக்கும் பெரிய அடுக்கு மாடி குடியிருப்பு வீட்டில் தனது குடும்பத்துடன் முதல் தளத்தில் வசித்து வருபவர் தான் விக்னேஸ்வரன். இவர் பிரபல மருத்துவமனையில் மருத்து வியாபாரியாக பணியாற்றி வருகிறார். சிலர் தீபாவளிக்கு வாங்கின பட்டாசுகளை மிச்சம் வைத்து தீப திருநாளன்று வெடித்து மகிழ்வர். அதுபோல விக்னேஸ்வரன் வீட்டிலும் தீபாவளிக்கு வாங்கின பட்டாசுகள் மீதி இருந்ததால் விக்னேஸ்வரனின் குழந்தைகள் வெடித்து கார்த்திகை திருநாளை கலர் புல்லாக இனிதே வரவேற்று வந்தனர்.
இந்நிலையில் வெடி வெடித்து அதில் இருந்து வெளியாகிய தீப்பொறி மற்ற பட்டாசுகள் மேல் விழுந்து வெடிக்க ஆரம்பித்தது. அதனின் விளைவாக வீட்டில் இருந்த சேனிடைசர் பெட்டியில் தீப்பிடித்து வீடு முழுவதும் நெருப்பு கொளுந்து விட்டு எரிந்தது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அப்புறப்படுத்தினர். அதிர்ஷ்டவசமாக எந்த உயிருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தீயணைப்பு வீரர்கள் தங்களின் உயிர்களை துச்சமாக மதிக்காமல் நெருப்பில் உயிரை பனையை வைத்து பல உயிர்களை காப்பாற்றியது பாராட்டக்கூடிய விஷயம் ஆகும்.