முன்கூட்டியே விடுதலை... சிறைத்துறையிடம் விண்ணப்பித்த சசிகலா!

by Sasitharan, Dec 2, 2020, 18:37 PM IST

சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ.10 கோடியே 10 லட்சத்தை அவரது வக்கீல்கள் செலுத்தியுள்ளனர். வங்கி வரைவோலையை(டிடி )பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நீதிபதி சிவப்பாவிடம் வக்கீல்கள் சி.முத்துகுமார், ராஜா செந்தூர்பாண்டியன் ஆகியோர் செலுத்தினர். இதையடுத்து சசிகலா எப்போது விடுதலை ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டிசம்பரில் அவரை விடுதலை செய்ய சிறைத்துறை முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிசம்பர் மாதமே அவரை விடுதலை செய்ய சிறைத்துறை முடிவு செய்துள்ளது எனத் தகவல் வெளியானது. டிசம்பர் 3 சசிகலா விடுதலையாக இருக்கிறார் என்றும் இதை கர்நாடக சிறை நிர்வாகம் வாய்மொழியாக கூறியுள்ளதாகவும், அவரின் உறவினர்கள், நெருக்கமான நபர்கள் கூறினர். மேலும் டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதாவின் நினைவுநாள் வருவதால் அன்றைய தினமும் சசிகலா வெளியே வர வாய்ப்பிருப்பதாகவும், அன்று ஜெயலலிதா சமாதியில் சசிகலா அஞ்சலி செலுத்துவார் என்றும் கூறப்பட்டது. ஆனால் இதுநாள் வரை சிறை நிர்வாகத்திடம் இருந்து சசிகலா விடுதலை தொடர்பாக தகவல் வெளிவரவில்லை.

இந்நிலையில், தண்டனை காலத்துக்கு முன்கூட்டியே விடுதலை செய்ய சசிகலா சிறை அதிகாரிகளிடம் விண்ணப்பித்து உள்ளார். சிறை அதிகாரிகள் அவரின் விண்ணப்பத்தை சிறைத்துறைக்கு அனுப்பியுள்ளனர். ஆனால் சசிகலா விண்ணப்பத்தின் மீதான எடுக்கப்படும் முடிவு நிலுவையில் உள்ளது என்று சிறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

You'r reading முன்கூட்டியே விடுதலை... சிறைத்துறையிடம் விண்ணப்பித்த சசிகலா! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை