சென்னையிலிருந்து மும்பைக்கு லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 14,000 செல்போன்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் மேல்மலை என்ற இடத்தில் கொள்ளையடிக்கப்பட்டது. கடந்த அக்டோபர் 21 ம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக 10 தனிப்படைகள் அமைத்து கிருஷ்ணகிரி போலீசார் விசாரணை நடத்தி மத்தியப் பிரதேச மாநிலத்தில் தேவாஸ் என்ற மாவட்டத்தில் 7 நபர்களைக் கைது செய்து கிருஷ்ணகிரி அழைத்து வந்தனர்.
இந்த கொள்ளை சம்பவத்தில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான
ரஜேந்தர் சவுகாண் ,பவானி சிங்கா, கமல் சிங்கா,ஹேமராஜ் ஜகலா,அமீர்கான், பரத் அஸ்வானி உள்ளிட்ட 7 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் திருட்டுக்குப் பயன்படுத்திய 4 லாரிகள் மற்றும் ஒரு காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கொள்ளையர்களைத் தனிப்படை போலிசார் ஓசூர் அரசு மருத்துவமனையில் இன்று காலை மருத்துவ பரிசோதனை செய்து மாலயில் ஒசூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.
வழக்கை விசாரித்த ஓசூர் இரண்டாவது குற்றவியல் நீதிமன்ற நடுவர் தாமோதரன் , அவர்கள் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் 6 பேரையும் கிருஷ்ணகிரி சிறையில் அடைத்தனர்.