திருநெல்வேலி ரெயில் பயணிகளுக்கு ஓர் நற்செய்தி...

திருநெல்வேலி ரெயில் பயணிகளுக்கு ஓர் நற்செய்தி...

Apr 5, 2018, 21:53 PM IST

கோடை விடுமுறையை முன்னிட்டு தென்னக ரெயில்வே, திருநெல்வேலி டூ கோவை, கோவை டூ திருநெல்வேலி, மற்றும் செங்கோட்டை டூ கோவை, கோவை டூ செங்கோட்டை ஆகிய வழித்தடங்களில், சிறப்பு கட்டண ரெயில்களை மூன்று மாதங்களுக்கு இயக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி வருகிற ஞாயிறு முதல் இயக்கப்பட உள்ளது.

விவரம்:-

திருநெல்வேலி சந்திப்பில் இருந்து கோவைக்கு (06019) ஏப்ரல் 8-ம் தேதி முதல் ஜூலை 1ம் தேதி வரையிலான அனைத்து ஞாயிற்றுகிழமையும், மாலை 6.20 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் திங்கட்கிழமை காலை 4.30 மணிக்கு கோவை சென்றடையும்.

அடுத்து, கோவையிலிருந்து திருநெல்வேலிக்கு (06020) ஏப்ரல் 11-ம் தேதி முதல் ஜூலை 4-ம் தேதி வரையிலான அனைத்து புதன்கிழமையும், இரவு 11.50 மணிக்கு கோவையிலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 8.35 மணிக்கு திருநெல்வேலிக்கு சென்றடையும்.

அதுபோல் கோவையிலிருந்து செங்கோட்டைக்கு (06021) ஏப்ரல் 9-ம் தேதி முதல் ஜூலை 2-ம் தேதி வரையிலான அனைத்து திங்கள்கிழமையும், இரவு 11.50 மணிக்கு கோவையிலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 9.20 மணிக்கு செங்கோட்டை சென்றடையும்.

அடுத்து, செங்கோட்டையிலிருந்து கோவைக்கு (06022) ஏப்ரல் 10-ம் தேதி முதல் ஜூலை 3-ம் தேதி வரையிலான அனைத்து செவ்வாய்க்கிழமையும், மாலை 5 மணிக்கு செங்கோட்டையிலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 4.30 மணிக்கு கோவை சென்றடையும்.

வழித்தடங்கள்:-

பொள்ளாச்சி- பழனி வழித்தடங்களில் அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளதால், இந்த வழித்தடத்தில் அந்த ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. அதாவது கோவையிலிருந்து செல்லும் ரெயில்கள், போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம் வழியாக சென்று திண்டுக்கல் தடத்துடன் இணைந்து, திருநெல்வேலிக்கும் செங்கோட்டைக்கும் சென்றடைகிறது. அங்கிருந்து கோவைக்கு வரும்போதும், திண்டுக்கல்லில் இருந்து பிரிந்து மேற்குறிப்பிட்ட வழித்தடங்களில் பயணப்பட்டு, கோவை வந்தடைகிறது.

பெட்டிகளின் எண்ணிக்கை:-

இந்த ரெயில்கள் அனைத்தும், ஒரு மூன்றாம் வகுப்பு குளிர்சாதன பெட்டியையும், 6 முன்பதிவு செய்யக்கூடிய இரண்டாம் வகுப்பு (படுக்கை வசதி கொண்ட) பெட்டியையும், 6 முன்பதிவு இல்லாத பொது பெட்டியையும் கொண்டதாகும்.

பின்குறிப்பு:-

இந்த ரெயில்களானது முதல் முறையாக தற்போது கோடை காலத்திற்கு மட்டும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. மக்களின் பயன்பாட்டை பார்த்து, நிரந்தரமாக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. பேருந்து கட்டணம் இரு மடங்காக உயர்ந்த பிறகு ரெயிலை பயன்படுத்துவோர் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துவிட்டது.

ஏற்கெனவே நாகர்கோவில் டூ கோவை செல்லும் ஒரே ஒரு தினசரி (இரவு) ரெயிலில், வார இறுதி மற்றும் விடுமுறை காலங்களில் 'மண் அள்ளிப் போட்டால் கீழே விழாத அளவிற்கு' பயணிகள் நெரிசலில் சிக்கி பயணித்து வருகிறார்கள். அந்த ரெயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகளில், வெறும் 500-600 இருக்கைகள் மட்டுமே இருக்கும். ஆனால் அந்த பெட்டிகளில் சாதாரணமாக 1500-2000 பேர் பயணித்து வருகிறார்கள். பத்து மணி நேரம் நின்று கொண்டே பயணிக்கிறார்கள். தென்னக ரெயில்வே தென் தமிழகத்தை வஞ்சித்து வருவதற்கு இந்த ஒரு தகவலே சாட்சி. ஏற்கனவே 12 மணி நேரத்துற்கு மேல் (பகலில்) ஓடும் பாசஞ்சர் ரெயில்கள் பராமரிப்பு பணிகளின் குறுக்கீடுகள் காரணமாக 16 மணி நேரம் வரை தாமதாப்பட்டு, நடுஇரவிலும் சென்று சேரும் அவலங்கள்அரங்கேறி வருகிறது.

ஆகவே, இனி வரும் நாட்களில் பயணிகள் சிறப்பு ரெயில்களை பயன்படுத்த தொடங்குவார்களேயானால்.. அவைகள் நிரந்தரமாக இயக்கப்பட வாய்ப்புள்ளது என்பதை புரிந்துகொண்டு பயணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் செய்திகளை படிக்க: thesubeditor.com

You'r reading திருநெல்வேலி ரெயில் பயணிகளுக்கு ஓர் நற்செய்தி... Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை