சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ.10 கோடியே 10 லட்சத்தை அவரது வக்கீல்கள் செலுத்தியுள்ளனர். வங்கி வரைவோலையை (டிடி) பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நீதிபதி சிவப்பாவிடம் வக்கீல்கள் சி.முத்துகுமார், ராஜா செந்தூர்பாண்டியன் ஆகியோர் செலுத்தினர். இதையடுத்து சசிகலா எப்போது விடுதலை ஆவார் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இதேபோல், இளவரசிக்கும் அபராத தொகை செலுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் 23-ம் தேதி இந்த அபராதம் செலுத்தப்பட்டது. இந்த தொகையை யார் யார் செலுத்தினார்கள் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளது.
இளவரசியின் மகன் விவேக் பெயரில் இரண்டு கோடியே பத்து ஆயிரம், சசிகலா கணவர் நடராஜனின் சகோதர் பழனிவேல் பெயரில் 3 கோடி ரூபாய், இன்னொரு சகோதரர் எம். ராமச்சந்திரன் பெயரில் 3 கோடி ரூபாய், இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா பெயரில் 1 கோடி ரூபாய், இன்னொரு மகள் ஷகீலா பெயரில் 1 கோடி ரூபாய்என 10 கோடியே 10 ஆயிரம் ரூபாய் நீதிமன்றத்தில் இளவரசிக்கு அபராதம் செலுத்தப்பட்டது.