பத்து ரூபாய்க்கு பிரியாணி விற்றவர் திடீர் கைது

Advertisement

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரே திருச்சி நெடுஞ்சாலை சாலை ஓரம் அரவிந்த் என்பவர் புதியதாக இன்று பிரியாணி கடையை திறந்தார். புதிய கடை திறக்கப்பட்டதால் கடையின் உரிமையாளர் கடையைப் பிரபலமாக்க வேண்டி திறப்பு விழாவை முன்னிட்டு பத்து ரூபாய் நாணயம் கொடுத்தால் பிரியாணி வழங்கப்படும் என விளம்பரப் படுத்தியிருந்தார் . இதை தொடர்ந்து ஏராளான மக்கள் பத்து ரூபாய் நாணயத்தை கொண்டு வந்து பிரியாணி வாங்கக் கடை முன் குவிந்தனர். இதனால் விழுப்புரம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்த தகவலறிந்து வந்த தாலுகா போலீசார் கடையை மூடச் செய்தனர். அப்போது கடையின் முன் பிரியாணி வாங்கக் குவிந்திருந்தவர்கள் போலீசார் வருவதைக் கண்டதும் ஓடினர். அதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் உரிய அனுமதி பெறாமலும் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள போது அதிகமான மக்களை ஒரே இடத்தில் திரண்டு வரச் செய்ததற்காக அரவிந்த் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து திறக்கப்பட்ட அன்றே கடைக்கு மூடு விழாவும் நடத்தப்பட்டது.

Advertisement
மேலும் செய்திகள்
young-woman-killed-for-refusing-to-have-sex-near-ulundurpet
ஆசைக்கு இணங்க மறுத்த பெண் - குத்தகைதாரர் வெறிச்செயல்
the-person-who-sold-biryani-for-ten-rupees-was-suddenly-arrested
பத்து ரூபாய்க்கு பிரியாணி விற்றவர் திடீர் கைது
villupuram-goldsmith-murders-wife-and-three-daughters-commits-suicide
தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகளை ஒவ்வொருவராக எழுப்பி சயனைடு விஷம் கலந்த பாலை கொடுத்த சிவகாமி.. குடும்பமே உயிரிழந்த பரிதாபம்..
admk-defeated-dmk-congress-in-vikkiravandi-nanguneri-bypoll
விக்கிரவாண்டி, நாங்குநேரியில் அதிமுக அமோக வெற்றி..
total-vote-percentage-vikkiravandi-nanguneri-bypoll
விக்கிரவாண்டி, நாங்குநேரியில் பதிவான வாக்குகள் எவ்வளவு?
vikkiravandi-nanguneri-by-poll-tommorow
விக்கிரவாண்டி, நாங்குநேரியில் நாளை வாக்குப்பதிவு.. காலை 7 மணிக்கு தொடக்கம்
mkstalin-campaign-for-dmk-in-vikkiravandi
எடப்பாடி அநியாய ஆட்சியில் நொந்து நூடுல்ஸ் ஆன மக்கள்... வி்க்கிரவாண்டியில் ஸ்டாலின் பேச்சு
how-edappadi-palanisamy-became-chief-minister
சசிகலா காலில் தவழ்ந்து விழுந்து முதல்வரான எடப்பாடி துரோகம் செய்யலாமா? தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேச்சு..
dmk-is-planning-to-give-money-to-voters-vikkiravandi-election
விக்கிரவாண்டி, நாங்குனேரியில் பணம் கொடுக்க திமுக திட்டம்.. எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு
dmk-announced-by-election-commitees-fo-vikkiravandi-nanguneri
விக்கிரவாண்டி, நாங்குனேரி தேர்தல்.. திமுக பொறுப்பு குழுக்கள் நியமனம்

READ MORE ABOUT :

/body>