கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது , ஒரு சமுதாயத்தைப் பற்றி பழமொழியை உதாரணம் காட்டிப் பேசி உள்ளாராம் இதைக்கண்ட தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் சிலர் ஆவேசமடைந்து செல்லூர் ராஜூவை மிரட்டும் விதமாக வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.மூன்று பேர் இடம் பெற்றுள்ள அந்த வீடியோவில் எங்களுடைய சமுதாயத்தைப் பற்றித் தரக்குறைவாகப் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையேல் சீவி விடுவோம் என்று அந்த பள்ளி மாணவர்கள் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
செல்லூர் ராஜுவிற்கு கொலை மிரட்டல் விடுக்கும் சிறுவர்கள்: வைரலாகும் வீடியோவால் பரபரப்பு
Advertisement