சினிமா துறையினர் வைத்த நான்கு கோரிக்கைகள்..

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் சினிமா துறையினர் நடத்திய போராட்டத்தில் நான்கு முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் சினிமாத்துறையினர் சார்பில் இன்று கண்டன அறவழிப் போராட்டம் நடைபெற்றது.

காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற இந்த போராட்டத்தில், தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், ஃபெப்சி உள்ளிட்ட சினிமா அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

இந்தப் போராட்டத்தில் 4 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை:

1. மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பாதிக்கக்கூடிய எந்தவொரு விஷயத்தையும் அரசாங்கம் அமல்படுத்தக் கூடாது.

2. காவிரி நீர் உற்பத்தியாகிற இடங்களையும், சேருகின்ற இடங்களையும் இயற்கை தீர்மானிக்கிறது. அதை சார்ந்திருக்கின்ற மக்கள் இரு மாநிலங்களிலும் இருக்கிறார்கள். அவர்களுடைய விவசாயம் மற்றும் குடிநீர் சார்ந்த வாழ்வாதாரத்தை நாங்கள் மதிக்கிறோம். அதேசமயம், காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழக விவசாயிகளுக்கான உரிமைகள் முறைப்படி கிடைக்க வேண்டுமென்று நாங்கள் கோருகிறோம்.

3. நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கக்கூடிய காவிரி நீர் பிரச்சினை, தமிழக மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு, அரசியலற்றப் பொதுநோக்குடன் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து, அதற்கு ஒரு நிரந்தரத் தீர்வைக் காண வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

4. கடந்த 25 வருடங்களாகப் பல அரசாங்கங்களால் கையாளப்பட்டு வருகிறது ஸ்டெர்லைட் பிரச்சினை. இப்பொழுது ஸ்டெர்லைட் நிர்வாகம் அந்த ஆலையின் உரிமத்தைப் புதுப்பிக்கவும், மேலும் விரிவாக்கவும் அனுமதி கோரி நிற்கிறது. இந்த நேரத்தில் அந்த ஆலை வெளிப்படுத்தும் நச்சுக்களால் பல்வேறு வகையில் அப்பகுதி மக்களும், குறிப்பாகக் கர்ப்பிணிப் பெண்களும் குழந்தைகளும் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.

அவர்களுக்கு உறுதுணையாகத் தமிழக அரசும், திரைத்துறை சார்ந்த நாங்களும் போராடி வருகிறோம். மத்திய அரசு இதற்கு செவிசாய்த்து, அப்பகுதி மக்களின் நீண்ட நாளைய கோரிக்கையை ஏற்று, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டுமென வலியுறுத்துகிறோம்.

மேலும், இவ்வளவு காலம் இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலையால், மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கும் பாதிப்புகளுக்கும் உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை தமிழக திரைத்துறை சார்பாக வலியுறுத்துகிறோம்.

- இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

 - thesubeditor.com

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!