ஏற்கனவே நடைமுறையில் இருந்து வரும் பல்வேறு விஷயங்கள் வரும் ஜனவரி 1-ஆம் தேதி புத்தாண்டு முதல் மாற்றம் செய்யப்பட்டு அமல்படுத்தப்பட உள்ளது. இது குறித்த சில முக்கிய விவரங்கள்:அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் இனி பாஸ் டேக் கட்டாயம் . மின்னணு முறையில் சுங்க கட்டணம் செலுத்துவதற்கான பாஸ் டேக் ஸ்டிக்கர் அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கணக்குகளை மாதந்தோறும் தாக்கல் செய்ய வேண்டியது நடைமுறையில் இருந்து வருகிறது.
ஒரு கோடி ரூபாய் வரை வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் இனி காலாண்டுக்கு ஒரு முறை ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்தால் போதுமானது.50 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட தொகைக்கான காசோலைக்கு இனி பாசிடிவ் பே என்ற புதிய கட்டாயமாகிறது. இதன்படி அந்த காசோலையின் எண் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது உள்ளிட்ட விபரங்களைச் சம்மந்தப்பட்ட வங்கிக்கு முன்னதாகவே தெரி விக்க வேண்டும்.
கிரெடிட் - டெபிட் மற்றும் கார்டுகளை ஸ்வைப்பிங் மெஷினில் செலுத்தாமலேயே பரிவர்த்தனை செய்வதற்கான வரம்பு 2000 ரூபாயில் இருந்து 5000 ரூபாயாக நிறுத்தப்பட உள்ளது.வரும் ஜனவரி 15ம் தேதி முதல் தரை வழி தொடர்பு தொலைப் பேசிகளில் (landline) இருந்து மொபைல் போன்களை தொடர்பு கொள்ள அந்த எண்ணுக்கு முன் பூஜ்யம் சேர்த்து டயல் செய்ய வேண்டும்
வாட்ஸ் ஆப் சமூக வலைத் தளம் சில குறிப்பிட்ட மாடல் மொபைல் போன்களில் செயல் படாது.பெரும்பாலான கார் தயாரிப்பு நிறுவனங்கள் ஜன 1 முதல் கார்களின் விலையை உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளது.