10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு குறித்த அட்டவணை இன்னும் 10 நாட்களுக்குள் வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:ஆண்டிறுதித் தேர்வுகளைப் பொறுத்தவரைச் சூழ்நிலைக்கு ஏற்ப கல்வியாளர்களின் கருத்துக்களைக் கேட்டு அதன் பின்னர் முதல்வர் உரிய நேரத்தில் அறிவிப்பை வெளியிடுவார்.
10 மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை இன்னும் பத்து தினங்களுக்குள் அறிவிக்கப்படும். கொரோனா பாதிப்பு காரணமாக 100 சதவீத பாடத்திட்டத்தை எடுத்துச் செல்ல முடியவில்லை. குறிப்பிட்ட காலத்தில் பள்ளிகளைத் திறக்க முடியவில்லை . பள்ளி வேலை நாட்கள் குறைந்து கொண்டே இருக்கிற அடிப்படையில் அதற்கேற்ப பாடத் திட்டங்களை மாற்றி அமைக்கப்படும். அதன்பின் கல்வியாளர்களின் நிலையை அறிந்து முதலமைச்சரின் ஒப்புதலைப் பெற்று விரைவில் அந்த அட்டவணை வெளியிடப்படும்தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டை முறையாகப் பின்பற்றாத பள்ளிகள் மீது பெற்றோர்கள் உரிய முறையில் எழுத்துப் பூர்வமாகப் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்தார்.