ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி மறுத்திருப்பது சரியான திசையின் முதல் அடி: கமல்ஹாசன் ட்வீட்

Apr 11, 2018, 09:19 AM IST

ஸ்டெர்லைட் ஆலைக்கு மாசு கட்டுப்பாடு வாரியம் அனுமதி அளிக்க மறுப்பு தெரிவித்திருப்பது சரியான திசை நோக்கிய முதல் அடி என்று மக்கள் நீதி மய்யத்தின் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் கடந்த 60 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு கட்சி தலைவர்களும் போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

இதற்கிடையே, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழங்கிய உரிமம் சமீபத்தில் காலாவதி ஆன நிலையில், ஆலையில் பராமரிப்பு பணிகள் மட்டுமே நடந்து வந்தன. தொடர்ந்து, ஆலையை தொடர்ந்து இயங்க அனுமதிக்கக் கோரி அந்நிறுவனம் சார்பில் மாசுக்கட்டுப்பாடு வாரியத்திடம் விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால், இதனை வாரியம் நிராகரித்தது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு மாசுக்கட்டுபாடு வாரியத்திற்கு வாழ்த்துக்கள். சரியான திசை நோக்கிய முதல் அடிதான் ஸ்டெர்லைட்டிற்கு அனுமதி மறுப்பு. இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. உங்களுக்குத் துணையாய் மக்களும் கண்காணிக்கத் துவங்கி விட்டார்கள்” என பதிவிட்டார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி மறுத்திருப்பது சரியான திசையின் முதல் அடி: கமல்ஹாசன் ட்வீட் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை