கூட்டணியில் இருந்தாலும் எங்கள் சின்னத்திலேயே போட்டி : ஜி.கே. வாசன் பேட்டி

by Balaji, Jan 2, 2021, 19:59 PM IST

வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்தாலும் எங்களது கட்சி சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என ஜி கே வாசன் தெரிவித்தார்.மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஜிகே வாசன்,50 ஆண்டுகளில் இந்த உலகத்தில் திராவிட ஆட்சிகள் மாறி மாறி நடந்தது .ஆனால் வரப்பிரசாதமாக இன்றைக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியின் கீழ் மதுரைக்கு மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தக் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனை வந்திருக்கிறது.இது மிகப்பெரிய சாதனை.

மதுரை விமானநிலையத்தின் விரிவாக்கப் பணிகள் மிக விரைவில் நடைபெற வேண்டும்.ஸ்மார்ட் சிட்டி அந்தஸ்தை மதுரை நகருக்கு மத்திய அரசு கொடுத்துள்ளது அத்தகைய ஸ்மார்ட் சிட்டி அந்த சட்டத்தின் அடிப்படையில் பல்வேறு கட்டமைப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அந்த பணிகள் எல்லாம் விரைந்து நடைபெற ஒரு குழு அமைக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.மூன்று நாட்களுக்கு முன்பாக கூட்டணி குறித்து முதல்வர் பேசும்பொழுது பாராளுமன்றத் தேர்தலில் அதிமுகவில் இருந்த கட்சிகள் அதே கூட்டணியோடு இருக்கிறது அதில் மாறுபட்ட கருத்து கிடையாது என்று கூறியுள்ளார்.

தேர்தல் நெருங்கிக்கொண்டிருக் கொண்டிருக்கிற வேளையில் கூட்டணி தர்மம் கொடுத்து நடப்பார்கள் என நம்புகிறேன்.எங்களது முதல் குறிக்கோள்.அதிமுக கூட்டணி தமிழகத்தில் மீண்டும் வெற்றி பெற வேண்டும் . தேர்தல் நடக்க இன்னும் இரண்டு மூன்று மாதங்களே உள்ளது.இந்த தேர்தலில் வெல்லக் கூடிய நல்ல வியூகத்தை ஏற்படுத்தி உள்ளோம் எங்களது அற்புதமான செயல் இருக்கும்.தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற முறையில் சொல்கிறேன் நிச்சயமாக எங்களது சின்னத்தில் தான் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் அதில் மாற்றம் இருக்காது.ரஜினிகாந்த் நல்லவர்களுக்குத் துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தேர்தல் நெருங்கும் பொழுது அவர் அந்த முடிவை எடுப்பார் என நம்புகிறேன், எனத் தெரிவித்தார்.

More Tamilnadu News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அதிகம் படித்தவை