தமிழ்நாடு மாநில விருதுகள்!

by Loganathan, Jan 22, 2021, 18:38 PM IST

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 2020 ஆம் ஆண்டிற்கான மாநில அரசு விருதுகளையும் 2021 ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருதையும் 2020 ஆம் ஆண்டிற்கான சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருது மற்றும் தமிழ் செம்மல் விருது ஆகிய விருதுகளையும் அறிவித்துள்ளார். 2020 ஆம் ஆண்டிற்கான தமிழ் செம்மல் விருதுகளுக்காக 38 மாவட்டங்களில் இருந்து முப்பத்தெட்டு தமிழ் அறிஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

உ.வே.சா விருது

கரிசல் இலக்கியத்தின் தந்தை எனப் போற்றப்படும் எழுத்தாளர் கி.இராஜநாராயணன் அவர்கள் உ.வே.சா விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், இவர் கரிசல் வட்டார அகராதி என்ற நூலையும் எழுதியுள்ளார்.

கம்பர் விருது

கம்பர் விருதானது எச்.வி.ஹண்டவுக்கு வழங்கப்பட்டது.
இவர் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரனுக்கு நெருக்கமானவர் மற்றும் ஒரு மூத்த அரசியல்வாதியாக இருந்தவர். இவர் கம்பராமாயணத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

திருவள்ளுவர் திருநாள் விருதுகள்

2021 ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது - முனைவர் வைகைச்செல்வன்
அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தந்தை பெரியார் விருது - அ. தமிழ் மகன் உசைன்

அண்ணல் அம்பேத்கர் விருது - வரகூர் அ. அருணாச்சலம்.

பேரறிஞர் அண்ணா விருது - அமரர் திரு. கடம்பூர் எம்.ஆர். ஜனார்த்தனன்.

பெருந்தலைவர் காமராசர் விருது - முனைவர் ச.தேவராஜ்.

மகாகவி பாரதியார் விருது - கவிஞர் பூவை செங்குட்டுவன்.

பாவேந்தர் பாரதிதாசன் விருது - அறிவுமதி (எ) மதியழகன்.

தமிழ் தென்றல் திரு.வி.க. விருது - வி.என். சாமி.

முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது - முனைவர் வீ. சேது ராமலிங்கம்.

சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகள்

2020 ஆம் ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருது - வி.ஜி.பி. உலக தமிழ்ச்சங்கம்.

கபிலர் விருது - செ.ஏழுமலை.

உ.வே.சா விருது - கி. இராமநாராயணன்.

கம்பர் விருது - மருத்துவர் எச்.வி.ஹண்டே.

சொல்லின் செல்வர் விருது - நாகை.முகுந்தன்.

உமறுப்புலவர் விருது - ம.அ.சையத் அசன் (எ) பாரிதாசன்.

ஜி.யு.போப் விருது - ஜெர்மன் நாட்டைச் சார்ந்த முனைவர் திருமதி உல்ரீகே
நிகோலஸ்.

இளங்கோவடிகள் விருது - மா.வைத்தியலிங்கன்.

அம்மா இலக்கிய விருது - முனைவர் தி.மகாலட்சுமி.

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் விருது - ஆ. அழகேசன்.

மறைமலையடிகளார் விருது - மறை.தி.தாயுமானவன்.

அயோத்திதாசப் பண்டிதர் விருது - முனைவர் கோ.ப. செல்லம்மாள்.

அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது - முனைவர் ஊரன் அடிகள்.

காரைக்கால் அம்மையார் விருது - முனைவர் மோ.ஞானப்பூங்கோதை
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நாளிதழ் விருது - தினமணி நாளிதழ்.

சி.பா.ஆதித்தனார் வார இதழ் விருது - கல்கி வார இதழ்.

சி.பா.ஆதித்தனார் மாத இதழ் விருது - செந்தமிழ் மாத இதழ்.

தேவநேயப் பாவாணர் விருது - முனைவர் கு.சிவமணி.

வீரமாமுனிவர் விருது -ஹாங்காங்கைச் சேர்ந்த முனைவர் கிரிகோரி ஜேம்ஸ்.

சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருது - சோ. சேசாச்சலம், முனைவர் இராம.குருநாதன், குணசேகர், முனைவர் பத்மாவதி விவேகானந்தன், சு. ஜோதிர்லதா.

2019 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கணினி தமிழ் விருது - சே இராஜாராமன்.

You'r reading தமிழ்நாடு மாநில விருதுகள்! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை