சாயக்கழிவு நீர் ஆற்றில் கலக்கும் விவகாரம்: சாயம் வெளுத்து போச்சு....

by Balaji, Jan 30, 2021, 11:45 AM IST

ஈரோட்டில் கோணவாய்க்கால் பகுதியில் சாயக்கழிவு நீர் நேரடியாக காலிங்கராயன் வாய்க்காலில் கலந்து வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.

ஒரு சாயலில் இந்த புகாருக்கு அமைச்சர் ஒரு சொட்டு கூட அப்படிக் கிடைக்கவில்லை என்று பதில் கொடுத்திருந்தார் ஆனால் அமைச்சர் கருப்பணன் சொல்லிய சில நாட்களில் மூன்று ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

ஈரோட்டில் உள்ள சாய மற்றும் தோல், ஆலைகளிலிருந்து இருந்து சுத்திகரிப்பு செய்யாமல் கழிவு நீர் ஆற்றில் கலப்பதால் ஆறு மாசுபட்டு வருகிறது. ஈரோடு வெண்டிபாளையம் அருகே உள்ள கோணவாய்க்கால் பகுதியில் மாநகராட்சி சாக்கடை கழிவு நீரானது நேரடியாக காலிங்கராயன் வாய்க்காலில் கலந்து வருவதால் தண்ணீர் மிகவும் மாசுபடிந்து வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர் . நள்ளிரவு நேரங்களில் சில ஆலைகளில் இருந்து கழிவு நீர் நேரடியாக காலிங்கராயன் வாய்க்காலில் கலக்கப் படுகிறது என்பது விவசாயிகளின் புகார்.
இது தொடர்பாக மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகளிடம் பல முறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விவசாயிகள் புகார் தெரிவித்ததற்கு, சாயக்கழிவுகள் ஒரு சொட்டு கூட வெளியேற்றப்படுவதில்லை, அது பொய் புகார் என கடந்த வாரம் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் தெரிவித்திருந்தார்..
இதற்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர்..

பிப்ரவரி 8 ம் தேதி முதல் சாயக்கழிவு கலப்பதை கண்டித்து காலிங்கராயன் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் திடீரென மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்திய சித்தோடு, நாடார்மேடு மற்றும் பெரியசேமூர் பகுதிகளில் 3 சாய மற்றும் சலவை பட்டறைகள் சட்டவிரோதமாக கழிவுகளை வெளியேற்றியதை உறுதிப்படுத்தினர்..

இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் அந்த 3 ஆலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டதாக ஆட்சியர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு சொட்டு கூட கழிவுநீர் கலக்க வில்லை என்று அமைச்சர் சொல்லிய சில நாட்களிலேயே விதிகளை மீறியதாக 3 ஆலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது .

You'r reading சாயக்கழிவு நீர் ஆற்றில் கலக்கும் விவகாரம்: சாயம் வெளுத்து போச்சு.... Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை