திருவண்ணாமலையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக தலைவர் ஸ்டாலின், கறவை மாடுக்கு பதில் கணவரை மீட்டு தருவதாக கூறிய வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. எனவே, ஆட்சி தக்க வைக்க முதல்வர் பழனிசாமியும், அதிமுகவினரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த தேர்தலில் ஆட்சியை பிடித்தே ஆன வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலினும், திமுகவினரும், தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக, திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் அதிமுகவை நிரகரிப்போம் என்ற பெயரில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். மேலும் தமிழகத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் கிராமசபை கூட்டத்தை நடத்தும் ஸ்டாலின் மக்களின் குறைகளை கேட்டறிந்து வரும் நிலையில், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தனி இலாக்கா அமைத்து மக்களின் குறைகளை 100 நாட்களில் தீர்க்க வழிவகை செய்வோம் என கூறியுள்ளார்.
இருப்பினும், பிரச்சார மேடைகளில் மு.க.ஸ்டாலின் பேசும் சில வார்த்தைகளும் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுகிறது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு கிராமசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலினிடம், திருமலை என்பவர் தனது கறவை மாடு தொலைந்துவிட்டதாகவும், தாங்கள் எனக்கு கறவை மாடு வாங்கி தரக் கோரி மனு அளித்துள்ளார்.
ஆனால், மனுவை படித்த மு.க.ஸ்டாலின், சகோதரி திருமலை கணவரை மீட்டுத்தர வேண்டும் என்று மனு கொடுத்திருக்கிறார் என்று படித்துள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் மு.க.ஸ்டாலினை இணைவாசிகள் வருத்து எடுத்து வருகின்றனர்.