போக்சோ வழக்கில் தண்டனை உறுதி என்று தெரிந்து நீதிமன்றத்திலிருந்து தப்பி ஓடிய விசாரணை கைதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள கரடிக்களம் என்ற கிராமத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக திருநாவுக்கரசு (40) என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமினில் வெளிவந்த திருநாவுக்கரசு நேற்று புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக வந்திருந்தார். இன்று வழக்கின் தீர்ப்பு வரும். அதில் தனக்கு தண்டனை நிச்சயம் என்று எண்ணிய திருநாவுக்கரசு அங்கிருக்கும் நீதிமன்றத்திலிருந்து தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் பரம்பூர் அருகே புளியம்பட்டி டாஸ்மாக் கடை அருகே அவர் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அவர் எப்படி இறந்தார் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தண்டனைக்குப் பயந்து தப்பிய கைதி மர்ம மரணம்
Advertisement