மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன் பிரதான கட்சி கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தூத்துக்குடியில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் சரத்குமார் பேசினார். தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கட்சியின் ஆறாவது பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பேசிய ராதிகா சரத்குமார் காமராஜர் வழியில்தான் சரத்குமார் நடப்பார் . இப்ப இல்லைனா எப்ப என்று சொல்லி நாடகத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்திருக்கிறேன். தலைவியிடம் கொடுத்த வாக்குக்காக 10 வருடம் அதிமுக வில் இருந்தார் தலைவர். ஜெயலலிதா இல்லாத இடத்தில் மற்றவர்கள் பேச்சை கேட்டு இருக்க அவர் விரும்பவில்லை. சரத்குமாருக்கு தூண் நான் எனக்கு தூண் அவர். எங்களுக்கு தெரிந்தது உழைப்பு மட்டும்தான்.
உயிரை கொடுத்து போராடுவோம். கடைசி வரை தலைவருக்கு துணையாக இருங்கள் சரித்திர சாதனையுடன் வெற்றிக்கணியை பறிக்க காத்திருக்க வேண்டும். நாங்கள் கருவேப்பிலையா கொத்தமல்லியா எங்களை பயன்படுத்தித் தூக்கி எறிய? சரத்குமார் உத்தரவிட்டால் நான் கோவில்பட்டி அல்லது வேளச்சேரியில் போட்டியிட தயார் என்றார். பின்னர் டிடிஎன் லாரன்ஸ் என்பவரை ராதாபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிமுகப்படுத்தி சரத்குமார் பேசியதாவது: ஒவ்வொரு தேர்தலுக்கும் அனைத்து கட்சிக்கும் தனி சின்னம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் சமத்துவமான தேர்தலை சந்திக்க முடியும்.
அதிக பொருளாதாரம் இருந்தால் தான் கட்சி நடத்த முடியும், ஆனால் நாம் 13 ஆண்டுகள் கடந்து விட்டோம். இனி எதற்காகவும் பின்வாங்க போவதில்லை. ஒருசிலர் ஒரு மமதையில் இருக்கிறார்கள். நாளையில் இருந்து பல கேள்வி வரும் அதை எதிர் கொள்வேன். கொள்கை ரீதியாக பிரதான கட்சி கூட்டணியில் கமலஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மையம் இணைந்துள்ளதை தெரிவித்த அவர் தங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக கமலஹாசன் இருப்பார். வெற்றி பெற்ற பிறகு யார் யார் எந்தெந்த பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதை கமலஹாசனே முடிவு செய்வார் என்றார்.