2011 தேர்தலில் நாம் மட்டும் கூட்டணியில் இல்லை என்றால் இன்று அதிமுக என்ற கட்சியே இருந்திருக்காது என்று தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் பேசினார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே போளூர் ஆர்.குன்னத்தூர் கிராமத்தில் தேமுதிக தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ பேசியதாவது : கடந்த 2011 தேர்தலில் நாம் அதிமுக கட்சியோடு கூட்டணி வைக்கவில்லை என்றால் இன்று அதிமுக என்ற ஒரு கட்சியே இருந்திருக்காது.
வரும் சட்டமன்ற தேர்தலில் கூட நாம் கூட்டணிக்காக அதிமுக பின்னாடி செல்லவில்லை. அதிமுக தான் தேமுதிக பின்னால் வருகிறது. எங்களிடம் கூட்டணிக்காக வாருங்கள் என்று பல கட்சிகளிடமிருந்தும் எனக்கு போன் வந்து கொண்டிருக்கிறது.10.5 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்தால் மக்கள் ஓட்டு போடுவார்கள் என்று அதிமுக நினைக்கலாம் ஆனால் மற்ற ஜாதிஓட்டுகள் என்ன ஆகும் என்று யோசித்தார்களா? பேசினார்.அவரது இந்த பேச்சை திருமண மண்டபத்தின் வெளியில் இருந்து பத்திரிகையாளர்கள் மற்றும் உளவுத் துறையினர் தங்களது செல்போனில் ரெக்கார்ட் செய்தனர்.