வாரம் ஒரு நாள் லீவு கொடுங்க: தற்கொலைக்கு முயன்ற போலீசாரின் கடைசி ஆசை

Advertisement

வாரம் ஒருமுறை போலீசாருக்கு விடுமுறை விடுங்க., அதுவே என் கடைசி ஆசை என, போலீஸ்காரர் ஒருவர், அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி, முகநுாலில் பதிவிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை, அவனியாபுரம் போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் பொன்னு செல்வன், (35) இவர், தெற்குவாசல் காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றுகிறார். இவரது மனைவி குறிஞ்சிமலர். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. பொன்னு செல்வன், நேற்று காலை, தன் முகநுாலில் கடிதம் ஒன்றை வெளியீட்டு விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அந்த கடிதத்தில் : என் சாவுக்கு மனைவியும், மாமியார் மீனாவும் தான் காரணம்.

என்னை மிரட்டி, என் அம்மாவிடம் செல்லக்கூடாது என, தடுக்கின்றனர். என் தங்கையிடம் பேசக்கூடாது என மிரட்டுகின்றனர். என் முழு சம்பளத்தையும் கேட்கின்றனர்.தர மறுத்தால், என் வேலைய விட்டு தூக்கி விடுவேன் என மிரட்டு கின்றனர். இவர்களை போலீசார் தண்டிக்க வேண்டும். என் மீது வீண் பழி சுமத்துகின்றனர். என்னால் நிம்மதியாக வேலை செய்ய முடியவில்லை.என் கடைசி ஆசை. போலீஸ் உயர் அதிகாரிகளையும், முதல்வர் ஐயாவையும் கேட்டுக் கொள்கிறேன். என் போன்ற அடிமட்ட போலீசார், மிகவும் கஷ்டப்படுகின்றனர்.

அவர்களுக்கு, கேரளா போன்று சங்கம் தர வேண்டாம். ஆந்திரா போன்று அதிக சம்பளம் தர வேண்டாம். வாரம் ஒரு நாள் விடுமுறை கொடுங்கள். அதுவே, என் கடைசி ஆசை. என்று குறிப்பிட்டுள்ளார். இதைப் பார்த்த சக போலீசாரும், நண்பர் களும் அதிர்ச்சியடைந்து, நேரில் சென்றபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது முகநுாலில் வெளியான கடிதம், போலீஸ் உயர் அதிகாரிகளின் அறிவுரைப்படி நீக்கப்பட்டது.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!

READ MORE ABOUT :

/body>