திமுக கூட்டணியில் கட்சிகளுக்கான தொகுதிகள் விவரம்..

by எஸ். எம். கணபதி, Mar 12, 2021, 20:37 PM IST

திமுக இந்த சட்டமன்றத் தேர்தலில் 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதி தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஏப்.6ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் திமுக 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மேலும், 14 கூட்டணி கட்சி வேட்பாளர்கள் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். எனவே, திமுக சின்னம் போட்டியிடும் தொகுதிகள் 187 ஆக இருக்கும். திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் வருமாறு: காங்கிரஸ்:பொன்னேரி, ஸ்ரீபெரும்புதூர், சோளிங்கர், ஊத்தங்கரை(தனி), ஓமலூர், ஊட்டி, கோவை தெற்கு, காரைக்குடி, மேலூர், சிவகாசி, ஸ்ரீவைகுண்டம், குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர், ஈரோடு கிழக்கு, தென்காசி, அறந்தாங்கி, விருத்தாசலம், நாங்குநேரி, கள்ளக்குறிச்சி, ஸ்ரீவில்லிப்புத்தூர், திருவாடனை, உடுமலைப்பேட்டை, மயிலாடுதுறை, வேளச்சேரி.

இந்திய கம்யூனிஸ்ட் : பவானிசாகர்(தனி), திருப்பூர்வடக்கு, வால்பாறை, சிவகங்கை, திருத்துறைப்பூண்டி, தளி. மார்க்சிஸ்ட் : திருப்பரங்குன்றம், திண்டுக்கல், கந்தர்வக்கோட்டை, கோவில்பட்டி, அரூர், கீழ்வேளூர். விடுதலை சிறுத்தைகள் : வானூர்(தனி), காட்டுமன்னார்கோயில்(தனி), செய்யூர்(தனி), அரக்கோணம்(தனி), நாகப்பட்டினம், திருப்போரூர். மதிமுக: மதுராந்தகம்(தனி), வாசுதேவநல்லூர்(தனி), சாத்தூர், மதுரைதெற்கு, அரியலூர், பல்லடம். கொங்கு மக்கள் தேசிய கட்சி: பெருந்துறை, திருச்செங்கோடு, சூலூர். மனிதநேயமக்கள் கட்சி: பாபநாசம், மணப்பாறை. வாழ்வுரிமை கட்சி: பண்ருட்டி, பார்வர்டுபிளாக்: உசிலம்பட்டி, ஆதித்தமிழர் பேரவை : அவினாசி, மக்கள் விடுதலைப் படை: நிலக்கோட்டை. இவ்வாறு திமுக கூட்டணியில் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

You'r reading திமுக கூட்டணியில் கட்சிகளுக்கான தொகுதிகள் விவரம்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை