ஹரியாணா மாநிலத்தில் பொது இடங்களில் ஹோலி பண்டிகை கொண்டாட அனுமதி இல்லை என உள்துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார். நாடு முழுவது கொரோனா தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இதனை தொடர்ந்து பல மாநிலங்கள் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தி வருகின்றன.
இந்நிலையில், தற்போது ஹரியாணாவில் பொது இடங்களில் ஹோலி பண்டிகை கொண்டாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஹரியாணா உள்துறை அமைச்சர் அனில் விஜ் வெளியிட்ட செய்தி குறிப்பில், கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பொது இடங்களில் கூட்டமாக ஹோலி பண்டிகை கொண்டாடத் தடை விதிக்கப்படுவதாக தெரிவித்தார். மேலும் தில்லி, மும்பை, சத்தீஸ்கர், போன்ற பல மாநிலங்களில் ஹோலி பண்டிகையை பொது இடங்களில் கொண்டாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.