சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – நீதிபதி அதிரடி உத்தரவு

by Sasitharan, Apr 7, 2021, 17:57 PM IST

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – நீதிபதி அதிரடி உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சாத்தான்குளத்தில் கடந்த ஆண்டு ஊரடங்கு உத்தரவை மீறி கடையை திறந்து வைத்ததாக கூறி, வியாபாரிகளான தந்தை, மகனை கைது செய்து அழைத்து சென்று சாத்தான்குளம் காவல்நிலைய காவலர்கள் கடுமையாக தாக்கினர். இதில் தந்தை, மகன் சிறைச்சாலையில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த வழக்கில் கைதாகியுள்ள காவல்துறை துணை ஆய்வாளர் ரகுகணேஷ் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில், "எனக்கு எதிரான வழக்கின் விசாரணை மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. வழக்கு தொடர்பான சிபிஐ ஆவணங்களை கேட்டு தாக்கல் செய்த மனு மாவட்ட நீதிமன்றத்தில் தள்ளுபடியானது.

இதுவரை எனக்கு வழக்கு தொடர்பான ஆவணங்கள் வழங்கப்படவில்லை. ஆவணங்களை வழங்கினால்தான் வழக்கை என்னால் எதிர்கொள்ள முடியும்.

எனவே பொய் சாட்சியம் மற்றும் தவறான குற்றச்சாட்டுகளை நீக்கக் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், எனது வழக்கு தொடர்பான ஆவணங்களை எனக்கு தர உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி முன், இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் சிபிஐ ஆவணங்களை தாக்கல் செய்யும் வரை வழக்கிற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதி வழக்கு விசாரணையின் சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

You'r reading சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – நீதிபதி அதிரடி உத்தரவு Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை