சென்னை நேப்பியர் பாலம் அருகே செல்பி எடுக்க முயன்ற இளைஞர் குவத்தில் தவறி விழுந்த நிகழ்வு அரங்கேறியுள்ளது. எங்கு பார்த்தாலும் செல்ஃபி, எந்த இடத்திலும் புகைப்பட மோகம். இளைஞ தலைமுறையினரிடம் இந்த செல்போன்களின் ஆதிக்கம் நிறைந்து காணப்படுகிறது. சாப்பிடுவதற்கு முன்பு, தூங்குவதற்கு முன், நடுரோடு, வண்டி ஓட்டும்போது என எங்கே பார்த்தாலும் செல்பிக்கள் வலம் வந்துகொண்டிருக்கின்றன.
தமிழ்நாடு, இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் செல்பி மோகம் இளைஞர்களை பிடித்து ஆட்டுகிறது. . உலகளாவிய அளவில் கூகுள் நடத்திய ஆய்வு, செல்ஃபிக்களை மேம்படுத்த ஃபில்டர்களைப் பயன்படுத்துவது இந்தியாவிலும் அமெரிக்காவிலும் பரவலாக உள்ளதாக தெரிவித்துள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்ஃபி மோகம் யாரையும் விடவில்லை.
ஆனால் இந்த செல்ஃபி மோகத்தால் பலரின் வாழ்க்கை பறிபோயுள்ளன என்பது தான் சோகமான உண்மை. அந்த வகையில் சென்னை நகரின் மிகப் பழமையான பாலங்களில் ஒன்றான நேப்பியர் பாலம் அருகே உள்ள கூவம் நதியோரம் நின்று செல்பி எடுக்கமுயன்ற வாலிபர் கூவம் ஆற்றில் தவறி விழுந்துள்ளார். விழுந்த நபர் கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பதும் ஸ்பென்சர் பிளாசாவில் உள்ள நிறுவனம் ஒன்றில் டீம் லீடராக பணிப்புரிந்து வருவதும் தெரியவந்துள்ளது. இவர் செல்பி எடுக்க முயன்றபோது குவத்தில் தவறி விழுந்துள்ளார்.
அப்போது அருகிலிருந்தவர்கள் உடனே தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த திருவல்லிகேணி தீயணைப்பு துறையினரும், மீட்பு படையினரும் அவரை மீட்டு முதலுதவி செய்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து அந்த இளைஞரை எச்சரித்து காவல்துறையினர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.