அதிரடி.. ஆக்சன்.. அசால்ட்... சத்தமில்லாமல் கிம் ஜாங் உன் செய்த சாதனை தெரியுமா?!

by Sasitharan, Apr 12, 2021, 20:57 PM IST

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அதிரடி நடவடிக்கை மற்றும் அதனால் ஏற்படும் சர்ச்சைக்குப் பெயர் போனவர். சில மாதங்களுக்கு முன், கிம் இறந்துவிட்டார் என்றும் அதனால் அவரது சகோதரி நாட்டை வழிநடத்துகிறார் என்றும் திடீரென தகவல் வெளியானது. ஆனால் அதற்கு சில நாட்கள் கழித்து பொதுமக்கள் முன் தோன்றினார். அதேபோல் உலக நாடுகள் கொரோனா பீதியில் உறைந்து கிடைக்க ஐந்து மாதங்கள் கழித்துத் தான் தங்கள் நாட்டில் முதல் கொரோனா தொற்று ஏற்பட்டது என்றார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன் கிம் தனது சகோதரி யோ ஜாங் உட்பட அவரது உதவியாளர்களுக்குக் கூடுதல் பொறுப்புகளைக் கொடுத்துள்ளதாகத் தென் கொரியாவின் உளவு அமைப்பு தகவல் வெளியிட்டது.

அதன்படி கிம்மின் சகோதரி யோ ஜாங்கே ஒட்டுமொத்த அரசு விவகாரங்களை வழிநடத்துகிறார் என்றாலும், கிம் வசமே நாட்டின் முழு அதிகாரம் இருக்கிறது என்றும் அந்த உளவு அமைப்பு தெரிவித்தது. கிம்மின் இந்த திடீர் மாற்றத்துக்குக் காரணம், பதவியின் காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தை நீக்கவும், கொள்கை ரீதியிலான தோல்வி ஏற்பட்டால் குற்றஞ்சாட்டப்படுவதைத் தவிர்க்கவுமே இப்படி ஒரு நடவடிக்கை எடுத்து இருக்கிறார் என்று காரணமும் கூறப்பட்டது. மேலும் சில மாதங்களுக்கு முன் கிம்முக்கு நடந்த இருதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவரின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வருகிறது என்றெல்லாம் கூறப்பட்டது.

ஆனால் அதையெல்லாம் வதந்தி என்பதை உறுதியாக்கும் வகையில் மீண்டும் வெளியுலகுக்கு வந்து தனது வழக்கமான பாணியில் உத்தரவுகளை சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில், தற்போது கிம் வடகொரியா அதிபராக பதவியேற்று 9 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டதாம். இதையடுத்து இதனை அந்நாட்டு மக்கள் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள் என அந்நாட்டு ஊடகங்கள் செய்திவெளிட்டுள்ளது.

வடகொரியாவில் 2011ம் ஆண்டு அப்போதைய அதிபரும் கிம் ஜாங் உண்ணின் தந்தையுமான கிம் ஜொங் இல் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதன்பின் இதற்கு அடுத்த ஆண்டு அதாவது கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல்மாதத்தில் கிம் ஜாங் உன் வடகொரியாவின் அதிபராகப் பதவி ஏற்றுக்கொண்டார். தனது பதவி காலத்தில் பல அட்ராசிட்டிகளை அசால்ட்டாக செய்து வரும் கிம் இன்னும் என்னென்னெ செய்ய காத்திருக்கிறாரோ தெரியவில்லை.

You'r reading அதிரடி.. ஆக்சன்.. அசால்ட்... சத்தமில்லாமல் கிம் ஜாங் உன் செய்த சாதனை தெரியுமா?! Originally posted on The Subeditor Tamil

More World News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை