என்னது கேன் வில்லியம்சன் இல்லையா? – ரசிகர்களின் கொந்தளிப்புக்கு பயிற்சியாளர் விளக்கம்!

by Simon, Apr 12, 2021, 20:58 PM IST

ஹைதராபாத் அணியில் கேன் வில்லியம்சன் இடம்பெறவில்லை என்பதால் ரசிகர்கள் கடுப்பாகினர். இது குறித்து அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் டிரேவர் பெய்லிஸ் கேன் வில்லியம்சனை களம் இறக்காதது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட்டின் மூன்றாவது போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் வெளிநாட்டு வீரர்களில் பேர்ஸ்டோ, டேவிட் வார்னர், முகமது நபி, ரஷித் கான் ஆகியோர் களம் இறங்கினர்.

கடந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோல்வியின் விளிம்புக்குச் சென்றபோதெல்லாம் அதை கைகொடுத்து தூக்கி நிறுத்தியவர் கேன் வில்லயம்சன். தனியொரு மனிதனாக பேட்டிங்கில் அசத்தி அணியின் வெற்றிக்கு உதவியது அவர் தான். அவர் கடந்த சீசனில் 11 இன்னிங்சில் 317 ரன்கள் அடித்தார்.

தலைசிறந்த பேட்ஸ்மேனான அவருக்கு இடம் கொடுக்காதது குறித்து ரசிகர்கள் அணி நிர்வாகத்தை கடுமையாக விமர்சனம் செய்தனர். ரசிகர்களின் கொந்தளிப்பை ஆற்றுப்படுத்தும் வகையில், அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் டிரேவர் பெய்லிஸ் கேன் வில்லியம்சனை களம் இறக்காதது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

கேன் வில்லியம்சன் குறித்து டிரேவர் பெய்லிஸ் கூறுகையில்போட்டியில் விளையாடுவதற்கான தகுதியை பெற கேன் வில்லியம்சனுக்கு இன்னும் கொஞ்சம் நேரம் தேவை என் நாங்கள் எண்ணுகிறோம். வலைப்பயிற்சியில் கொஞ்சம் அதிகமாக பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

இது நடந்திருந்தால் பேர்ஸ்டோவிற்குப் பதிலாக கேன் வில்லியம்சன் இடம் பிடித்திருப்பார். ஆனால் பேர்ஸ்டோ இந்தியாவிற்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். போட்டி சென்று கொண்டிருக்கும்போது கட்டாயம் கேன் வில்லியம்சன் அணியில் இடம் பிடிப்பார் என்றார். பேர்ஸ்டோ நேற்றைய போட்டியில் 40 பந்தில் 55 ரன்கள் அடித்தார். இந்த போட்டியில் ஐதராபாத் அணி 10 ரன்னில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

You'r reading என்னது கேன் வில்லியம்சன் இல்லையா? – ரசிகர்களின் கொந்தளிப்புக்கு பயிற்சியாளர் விளக்கம்! Originally posted on The Subeditor Tamil

More Ipl league News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை