நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து வழக்கறிஞர் ராஜசேகர் என்பவர் கருத்து வேறுபாடு காரணமாக விலகியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி மாதம் 21-ஆம் தேதி ராமேஸ்வரத்தில் உள்ள, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வீட்டில் இருந்து “நாளை நமதே” என்ற பெயரில் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். மேலும், தனது கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் என்ற பெயர் சூட்டினார்.
இந்த நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யக் கட்சியில் இருந்து வழக்கறிஞர் ராஜசேகர் என்பவர் திடீரென விலகியுள்ளார். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தனக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்றும், அதனால் அந்த கட்சியில் இருந்து விலகியதாகவும் வழக்கறிஞர் ராஜசேகர் கூறியுள்ளார்.
கட்சி தொடங்கிய ஒருசில மாதங்களிலேயே முக்கிய பிரபலம் ஒருவர் கட்சியில் இருந்து விலகியுள்ளது அக்கட்சி தொண்டர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளதோடு, கட்சிக்கு சருக்கல் ஏற்பட்டுள்ளது.