சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நகைச்சுவை நடிகர் விவேக் சிகிச்சை பலனின்றி காலமானார்.
நேற்றைய முன்தினம் நகைசுவை நடிகர் விவேக், அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். பின்னர் பேசிய அவர், ``அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி குறித்து பயம் தேவையில்லை. தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்பும் கொரோனா வரும். ஆனால் உயிரிழப்புகள் நேராது. அனைவரும், முக கவசம் அணிய வேண்டும். அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மிகவும் திறமைசாலிகள்" எனப் பேசியிருந்தார்.
நேற்று காலை சினிமா பட்டபிடிப்பு ஒன்றில் கலந்து கொண்ட விவேக்கிற்கு படப்பிடிப்பு தளத்தில் வைத்து திடீர் என மாரடைப்பு ஏற்பட்டது உடனடியாக அவரை தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தனர். இதை கேள்விப்பட்ட அவரது மனைவி மற்றும் மகள் அவரை அனுமதித்துள்ள வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்
1987-ம் ஆண்டில் பாலச்சந்தர் இயக்கத்தில் 'மனதில் உறுதி வேண்டும்' என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நடிகர் விவேக் அறிமுகமானார்.
தமிழ் சினிமாவில் தனது நகைச்சுவையுடன் சேர்ந்து சமூகக் கருத்துக்களையும் தொடர்ந்து பேசிவந்தவர்.அதனால் 'சின்னக் கலைவானர்' என்ற பெயரையும் பெற்றார்.
2000-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டில் மட்டும் 50-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் விவேக்.
இதுவரை 2020-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.2009-ம் ஆண்டு பத்ப ஸ்ரீ விருதைப் பெற்றவர்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மீது மிகுந்த பற்றுக் கொண்டிருந்த அவர், மாணவர்களைத் திரட்டி ஒரு கோடிக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு சமூகப் பணியாற்றி வந்தார்.