சிபிஐ கட்சியின் மாநில செயலாளர் சி.மகேந்திரன். இவர் 35 வருடங்கள் முன்பு இதே நாளில் தனக்கு நடந்த சம்பவம் ஒன்றை நினைவு கூர்ந்துள்ளார். படிப்பதற்கு இந்த சம்பவம், தற்போது பரவலாகி வருகிறது. அவரின் பதிவில், ``1985 ஆண்டு ஏப்ரல் மாதம்21 ஆம் தேதி. மதுரையில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநில மாநாடு. தோழர் டி ராஜா,எம் ஏ பழனியப்பன்,விருதுநகர் ராமசாமி,சிவகங்கை குணசேகரன் திருச்சி பாலகிருஷ்ணன், திருச்சி செல்வராஜ் ஆகியோர் மேடையில் இருந்தனர். மாநாட்டின் முழுப்பொறுப்பையும் தோழர் சேதுராமன் ஏற்றிருந்தார்.
நான் மேடையில் பேசிக் கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு குறிப்பு, பேச்சை விரைவில் முடிக்குமாறு என் கையில் திணிக்கப்பட்டது. என் மனைவி பிரசவ வலியால் துடித்து லால்குடி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருப்பதை அறிந்து கொண்டேன். அப்பொழுது பஸ் பயணம் 7 மணி நேரம்.இட நெருக்கடியில் நின்று கொண்டே சென்றேன். மகன் புகழ் பிறந்திருந்தான். பங்கஜத்தின் கண்களைப் பார்த்தேன். கண்ணீர் நிறைந்திருந்தது. இன்று புகழின் பிறந்தநாள்" என்று தனது மகன் பிறந்தநாள் குறித்து வித்தியாசமாக பதிவிட்டுள்ளார்.
இவரின் மகன் புகழ் தந்தையை போலவே பொதுவுடைமை கொள்கைகளில் தீவிரமாக இருக்கும் வேளையில் சினிமாவிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கக்து