கொரோனா தடுப்பூசி போடுவதற்காக, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரும் 28-ம் தேதி முதல் கோவின் இணைய தளம் மூலம் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.
கொரோனா இரண்டாம் அலை அதிகரிக்க தொடங்கியதால், நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மே 1 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அண்மையில் அனுமதி வழங்கியது. இதற்கான முன்பதிவு வருகிற 28ஆம் தேதி தொடங்க உள்ளது. கோவின் இணையதளம் மற்றும் ஆரோக்கிய சேது செயலிகள் மூலம் தடுப்பூசி செலுத்த முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையதளம் மற்றும் செயலி மூலம் அருகில் உள்ள தடுப்பூசி மையங்களை கண்டறிந்து, முன்பதிவு செய்து கொள்ளலாம்.
எவ்வாறு பதிவு செய்ய வேண்டும் என்ற முறையை பார்க்கலம்:-
cowin.gov.in என்ற இணையப்பக்கத்திற்குச் செல்லவும். பின்னர் பதிவுசெய்ய 'register/sign in yourself'என்பதை க்ளிக் செய்யவும். உங்களுடைய 10 இலக்க மொபைல் எண் அல்லது ஆதார் எண்ணை டைப் செய்யவும். உங்களுடைய மொபைல் எண்ணிற்கு வரும் OTP-யை நிரப்பவும். அதனைத் தொடர்ந்து, உங்களுடைய விவரங்களை பதிவுசெய்தபிறகு, தடுப்பூசி போட்டுக்கொள்ள நீங்கள் விரும்பும் தேதி மற்றும் நேரத்தைக் குறிப்பிடவும்.
தடுப்பூசி செலுத்திக்கொண்டபிறகு, உங்களுக்கு குறிப்பு ஐடி ஒன்று கொடுக்கப்படும். அதைவைத்து, தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம்.
பதிவுசெய்ய தேவையான ஆவணங்கள்:-
ஆதார் அட்டை, பான் காடு, வாக்காளர் அடையாள அட்டை, ஒட்டுநர் உரிமம், சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை அடையாள அட்டை, எம்.பி/எம்.எ.ஏ/எம்.எல்.சி வழங்கிய அடையாள அட்டை, பாஸ்போர்ட், பாஸ்புக்(வங்கி/ அஞ்சலகம்), ஓய்வூதிய அட்டை, மத்திய / மாநில அரசு / பொது நிறுவனங்களால் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சேவை அடையாள அட்டை போன்ற மேற்கண்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்று அவசியம்.
ஆரோக்ய சேது செயலிமூலம் பதிவுசெய்யும் முறை :-
ஆரோக்ய சேது செயலியின் முன்பக்கத்திலுள்ள கோவின் பக்கத்தை க்ளிக் செய்யவும். தடுப்பூசி முன்பதிவை செலக்ட் செய்யவும். மொபைல் எண்ணை டைப் செய்யவும். ஓடிபியை நிரப்பவும். சரிபார்க்க என்ற ஆப்ஷனை அழுத்தவும். இதையடுத்து, அங்கிருந்து தடுப்பூசி முன்பதிவு பக்கத்திற்கு சென்றுவிடும். பிறகு கோவின் செயலிக்கு குறிப்பிட்டதைப் போன்றே பதிவுசெய்யவும்.