தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து விஷால் விலக வேண்டும் என இயக்குநர் சேரன் போர்க்கொடி தூக்கியுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட நடிகர் விஷால் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து விஷால் விலக வேண்டும் என இயக்குநர் சேரன் போர்க்கொடி தூக்கியுள்ளார்.
தேர்தலில் களமிறங்கும் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும், தயாரிப்பாளர் சங்கம் அரசாங்கத்தை நம்பியிருப்பதால், விஷால் தேர்தலில் போட்டியிட்டால் தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என சேரன் குற்றச்சாட்டினார்.
தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவி ஏற்று 8 மாத காலமாகியும் விஷால் இதுவரை எந்தவித வாக்குறுதிகளையும் நிறைவுவேற்றவில்லை என சேரன் குற்றம் சாட்டியுள்ளார். ஊடக விளம்பரத்திற்காக வெற்று அறிவிப்புகளை விஷால் விடுப்பதாக அவர் விமர்சனம் செய்துள்ளார். விஷால் பதவியை ராஜினாமா செய்யும் வரை உள்ளிருப்பு போராட்டத்தை கைவிடப் போவதில்லை எனவும் சேரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக, எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நடிகர் விஷால், ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து தண்டையார்பேட்டையிலுள்ள தேர்தல் அலுவலர் அலுவலகத்திற்கு சென்ற விஷால் வரிசையில் காத்திருந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.