கேரளா மாநிலம் எர்ணாகுளத்திற்கு நீட் தேர்வெழுத மகனை அழைத்துச்சென்ற தந்தை மரணம் அடைந்தார். மாணவரின் தந்தை கிருஷ்ணசாமியின் உடலை தமிழகம் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படு அவரது சொந்த ஊருக்கு எடுத்து வரப்படுகிறது. மேலும் கிருஷ்ணசாமியின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை வழங்கவும் முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர் பொது நிவராண நிதியிலிருந்து 3 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணசாமியின் மனைவி பாரதி மகாதேவி மகனின் மேற்படிப்பிற்கு உதவுமாறு கேட்டுகொண்டதால் மாணவரின் கல்வி செலவை தமிழக அரசே எற்கும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியது, ‘நீட் தேர்வு எழுத மகனை கேரளா அழைத்துச் சென்ற தந்தை கிருஷ்ணசாமி எர்ணாகுளத்தில் மரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.
தந்தை இறந்தது தெரியாமல் மகன் கஸ்தூரி மகாலிங்கம் நீட் தேர்வை எழுதினார் என்ற செய்தி மேலும் துயரத்தை தருகிறது.
மாணவர் கஸ்தூரி மகாலிங்கம் அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் தமிழக பாஜக சார்பில் எங்களது ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு வருங்காலத்தில் மாணவன் கஸ்தூரி மகாலிங்கம் படிப்பிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக பாஜக உதவும். என தெரிவித்துள்ளார்.