கர்நாடக தேர்தல் முடிவடைந்த நிலையில், 20 நாட்களுக்கு பிறகு இன்று, பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது.
நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 20 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்து வந்த நிலையில், இன்று வரலாறு காணாத உச்சத்தை எட்டி உள்ளது.
கர்நாடகாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த ஏப்ரல் மாதம் 24ம் தேதி முதல் நேற்று வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாம் இருந்து வந்தது.
இந்நிலையில், இன்று முதல் விலையில் அதிரடி மாற்றத்தை கொண்டு வந்து மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 18 காசு உயர்ந்து ரூ.77.61 ஆக நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், சென்னையில் டீசல் விலை ஒரு லிட்டருக்கு 23 காசு உயர்ந்து ரூ.69.79ஆக நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலை மாற்றம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.