ஏமன் நாட்டில் மையம் கொண்டுள்ள சாகர் புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏடனில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. அந்த புயலுக்கு சாகர் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் சற்று நகர்ந்து ஏமனின் தென்கிழக்கு 400 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.
சாகர் புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது. இருப்பினும், தமிழக மீனவர்கள் அரபிக்கடல் ஒட்டியுள்ள பகுதிகளில் அடுத்த இரு தினங்களுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேசமயம், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com