மாணவர்கள் பேருந்தில் இலவசமாக பயணிக்க இனி பஸ் பாஸ் தேவையில்லை. மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.
பள்ளி மாணவர்கள் இலவசமாக பேருந்தில் பயணிக்க அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. ஆனால், மாணவர்கள் சிலர் பஸ் பாஸ் எடுத்து வர மறந்து பேருந்தில் ஏறிவிட்டால் நடத்துனர்கள் அவர்களை இலவசமாக பயணிப்பதில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இதையடுத்து, பள்ளிச் செல்லும் மாணவர்கள் பஸ் பாஸ் வைத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே போதும். அவர்கள் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “மாணவர்கள் சீருடையில் இருந்தால் அவர்களை பேருந்தில் பயணம் செய்ய நடத்துனர் மற்றும் ஓட்டுனர் அனுமதிக்க வேண்டும். இதற்கு, எந்தவித தடையும் இல்லை. போக்குவரத்தில் இடையூறு இல்லாத வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com