இந்திய குடிமைப் பணி தேர்வுகளில் பாரபட்சமான நடைமுறைகள் அமல்படுத்தப்பட உள்ளதாகவும், அது உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் அழுத்தம் கொடுத்துள்ளார் மு.க.ஸ்டாலின்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளில் வழக்கமாக தேர்வு செய்யப்படும் முறையில் மாற்றம் செய்ய முயற்சி மேற்கொண்டுள்ளது மத்திய பாஜக அரசு. இந்த புதிய நடைமுறையில், குடிமைப் பணி பரீட்சையில் தேர்வு பெற்று அரசு பயிற்சியில் இருக்கும் போதே, அவர்களுக்கு சாதகமாக அதிக மதிப்பெண்கள் கொடுக்கம்படியான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம், அரசுக்கும் அதிகாரிகளுக்கும் ஆதரவாக செயல்படும் நபர்கள், வேண்டிய இடத்தில் போஸ்டிங் வாங்கக்கூடும் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை குறித்து திமுக-வின் செயல் தலைவர் ஸ்டாலின், `குடிமைப் பணி தேர்வு முறையில் இந்த புதிய மாற்றத்தின் மூலம் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மாணவர்களுக்கு துரோகம் இழைக்கப்படும்.
பிரதமர் மோடி, நாட்டில் எந்த இடத்திலும் சமூகநீதி என்பதே இருக்க கூடாது என்று முடிவெடுத்துவிட்டார் போலும். இந்த மாற்று விதிமுறையை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால், பெரும் போராட்டத்தை திமுக கையில் எடுக்கும்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com