தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி போராட்டம் நடத்தியவர்கள்மீது காவல்துறையினர் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் பொதுமக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதன்படி, இன்று திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் பாதுகாப்பு பணியில் 20 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருகிறார்கள்.
சென்னையில் மெரினா உள்ளிட்ட முக்கிய பொது இடங்கள், தலைமைச் செயலகம், முக்கிய அரசு அலுவலகங்கள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் காவல்துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இணையதளசேவை முடக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com