ஸ்டெர்லைட் வெற்றி உயிரிழந்தவர்களுக்கு சமர்ப்பணம்: ரஜினிகாந்த்

ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்து எடுத்த நடவடிக்கை, போராட்டத்தில் உயிரிழந்த ஆன்மாக்களுக்கு சமர்ப்பணம் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த 22ம் தேதி நடத்திய மாபெரும் போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

காயமடைந்தவர்களை நேற்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடப்படும் என்றும் உறுதி அளித்தார்.

இதன் பிறகு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையில் துணை முதல்வர் மற்றும் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், நேற்று மாலை ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தமாக மூடுவதற்கு தமிழக அரசு அரசானை வெளியிட்டது. தொடர்ந்து, சில மணி நேரங்களில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆலைக்கு சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டினார்.

தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், அரசியர்வாதிகளும், முக்கிய பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் இதுகுறித்து கூறுகையில், “போராட்டத்தில் உயிரிழந்த ஆத்மாக்களுக்கு ஸ்டெர்லைட் வெற்றி சமர்ப்பணம். அப்பாவி மக்களின் ரத்தம் குடித்த இந்த மாதிரி போராட்டங்கள் வருங்காலத்தில் தொடரக்கூடாது என்று இறைவனை வேண்டுகிறேன்” என்றார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!