தூத்துக்குடி துப்பாக்கிச்சூடுக்கு யார் காரணம்?- நீதிமன்றம் கேள்வி

by Rahini A, Jun 3, 2018, 20:33 PM IST

’தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் மக்கள் மீது துப்பாக்கிச்சூடுக்கு உத்தரவிட்டது யார்?’ என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்குக் கேள்வி எழுப்பியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த 22ம் தேதி நடத்திய மாபெரும் போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இது தொடர்பான முதல் தகவல் அறிக்கையில், `போராடிய மக்களுக்கு முதலி கலைந்து சென்றுவிடுமாறு போலீஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், அதை அவர்கள் பொருட்படுத்தவில்லை. சிறிது நேரத்தில் அவர்கள் மோதல் போக்கை கடைபிடித்தனர். இதனால், வேறு வழியில்லாமல் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது.

மக்கள் அதிகாரம், நாம் தமிழர் கட்சி போன்ற சில அமைப்புகள் ஊடுருவி வன்முறையை கையில் எடுத்தனர்' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதை அனைத்தையும் பெரும்பான்மையான மக்கள் மறுக்கின்றனர். ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கையோ, ரப்பர் குண்டுகளோ பயன்படுத்தப்படவில்லை.

போலீஸ் நேரடியாக துப்பாக்கி சூட்டில் இறங்கியது என்று கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கு ஒன்று இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வசாரணைக்கு வந்தது. அப்போது, `மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த எது காரணமாக இருந்தது. யார் துப்பாக்கி சூட்டுக்கு அனுமதி அளித்தது. இது குறித்து இன்னும் 5 நாட்களில் பதில் அளிக்க வேண்டும்.

முக்கியமாக, தூத்துக்குடியில் போராட்டத்துக்கு பின்னர் காணாமல் போனவர்களின் குடும்பங்களை விசாரணை என்ற பெயரில் போலீஸ் தொந்தரவு செய்யக் கூடாது' என்று கறாரன உத்தரவை பிறப்பித்துள்ளது நீதிமன்றம்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading தூத்துக்குடி துப்பாக்கிச்சூடுக்கு யார் காரணம்?- நீதிமன்றம் கேள்வி Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை